தளபதி என்றுமே மன்னராக முடியாது! மு.க.ஸ்டாலினை விளாசும் செங்கோட்டையன்Sponsored'ஸ்டாலின் தளபதியாக மட்டுமே இருக்க முடியும். அவர் என்றைக்கும் மன்னராக முடியாது' என அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழக அரசின் நிர்வாகம் முடங்கிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்துவந்தார். மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 1570 கோப்புகளில் கையெழுத்திட்டதாகக் கூறியதையும் அவர் விமர்சித்தார். இதையடுத்து, மு.க.ஸ்டாலினுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று பதிலளித்துள்ளார்.

Sponsored


ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,' ஸ்டாலின் என்றுமே தளபதியாக மட்டுமே இருக்க முடியும், அவர் ஒருபோதும் மன்னராக முடியாது' எனக் கூறியுள்ளார். மேலும், தமிழக விவசாயிகளுக்காக பயிர்க் காப்பீட்டுத் திட்டம்மூலம் சுமார் 7,000 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. விவசாயிகள் நலன் கருதி, வேகமாக இந்த அரசு பணியாற்றுகிறது' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Sponsored
Trending Articles

Sponsored