சிக்கிய சேகர் ரெட்டியின் டைரி: 'வான்டட் லிஸ்ட்' அமைச்சர்கள் யார்.. யார்..?!Sponsoredசேகர் ரெட்டியிடம் லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பட்டியலை வருமான வரித்துறை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சட்டவிரோதமாக 34 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி வைத்திருந்ததாக தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரின் கூட்டாளிகளை சிபிஐ கைது செய்தது. இதையடுத்து தமிழக அரசின் தலைமை செயலாளர் ராம மோகனராவிடமும் சோதனை நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் முக்கிய அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.

Sponsored


இந்நிலையில், சேகர் ரெட்டியிடம் லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பட்டியலை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது வருமான வரித்துறை. சுமார் 300 கோடி ரூபாய் அளவில் லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாக சேகர் ரெட்டியின் டைரியின் மூலம் தெரிய வந்துள்ளது. லஞ்சம் வாங்கியதற்கும், அரசு அலுவலகத்தை தவறாக பயன்படுத்தியதற்கும் ஆதாரம் உள்ளதாகவும் வருமான வரித்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதையடுத்து, லஞ்சம் வாங்கியவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என வருமான வரித்துறை பரிந்துரை செய்துள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored