தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் நாளை சென்னை வர உத்தரவு பிறப்பித்தார் மு.க.ஸ்டாலின்!Sponsoredதி.மு.க.வின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் நாளை காலை சென்னை வர தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சட்டப்பேரவையை கூட்டக்கோரி இன்று மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதினார். அதில் ‘ஜனநாயகத்தை வலுப்படுத்த சட்டப்பேரவை விவாதங்கள் அவசியம். ஆனால், சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டம் விதிகளுக்கு மாறாக இறுதி செய்யப்பட்டுள்ளது. துறை வாரியான மானியக் கொள்கைகளை விவாதிக்க, சட்டமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும்’ என வலியுறுத்தியிருந்தார்.

Sponsored


இதனிடையே தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் நாளை சென்னை வர வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். நாளை காலை 10 மணிக்கு தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சட்டப்பேரவையை கூட்டுவது தொடர்பாக  தீர்மானம் நிறைவேற்றவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, நாளை காலை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
 

Sponsored
Trending Articles

Sponsored