கருணாநிதி வைர விழா: 'கோட்டை' கட்டும் உடன்பிறப்புகள்..!Sponsoredகருணாநிதியின் சட்டமன்ற வைரவிழாவை மிகப் பிரமாண்டமாக நடத்துவதற்கு, தி.மு.க பலத்த ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. கருணாநிதி தமிழக சட்டப்பேரவைக்குள் நுழைந்த ஆண்டு 1957. குளித்தலைத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக முதன்முதலாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். பின்னர் நடந்த எந்தச் சட்டமன்றத் தேர்தலிலும் அவர் தோல்வியடையவில்லை. கருணாநிதி, தமிழக சட்டமன்றத்துக்குள் நுழைந்து 60 ஆண்டுகள் நிறைவடையும் தருவாயில், அதைப் பிரமாண்டமாகக் கொண்டாடுவதற்கு தி.மு.க ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. நாடு முழுவதும் பல அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

Sponsored


இந்நிலையில், விழாவுக்கான அரங்கத்தை அமைக்கும் பணி, பார்த்துப் பார்த்து செய்யப்பட்டுவருகிறது. கலை இயக்குநர் ஜி.கே மேற்பார்வையில் அரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் முகப்பு போன்ற வடிவில் அமைய இருக்கும் அரங்கத்தின் மினியேச்சரின் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Sponsored


படங்கள்: Twitter @JAnbazhaganTrending Articles

Sponsored