அலுவலகத்துக்குச் செல்லாமல் அமிதாப் படத்துக்குச் சென்ற கெஜ்ரிவால்..! - கபில் மிஸ்ரா குற்றச்சாட்டுஅரவிந்த் கெஜ்ரிவால் தனது அலுவலகத்துக்குச் செல்லாமல் அமிதாப் பச்சன் நடித்த 'சர்கார்-3' திரைப்படத்துக்குச் சென்றார் என்று ஆம்ஆத்மியிலிருந்து நீக்கப்பட்ட கபில்மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கபில் மிஷ்ரா முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது லஞ்சம் வாங்கியதாக குற்றசாட்டை முன்வைத்தார். மேலும் ஆம் ஆத்மி கட்சியினருக்கு எதிராக அவர் உண்ணாவிரத போராட்டத்தையும் மேற்கொண்டார். இதனிடையே கடந்த வருடம் 2 முறை மட்டுமே கெஜ்ரிவால் அலுவலகம் சென்றுள்ளதாக கபில் மிஷ்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

Sponsored


இதுகுறித்து அவர் கூறுகையில், 'அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் இந்த வேளையில் அவர் மக்களிடமிருந்து விலகி நிற்கிறார். பல நாள்களுக்குப் பின்னர் வெளியே வந்த அவர் அமிதாப்பச்சன் நடித்த சர்கார் 3 படத்துக்குத்தான் சென்றார். மேலும் அலுவலகத்துக்கு சரியாக வராமல் இருக்கும் அவர் தற்போது ஊழல்வாதியாகவும் மாறி வருகிறார்' என கபில் மிஷ்ரா விமர்சித்துள்ளார்.
 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored