'விரைவில் சட்டப்பேரவை கூட்டப்படும்!'- முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'தமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

Sponsored


ஊட்டியில் ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் மலர்க் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி உதகை அரசுத் தாவரவியல் பூங்காவில் 121-வது மலர்க் கண்காட்சி இன்று தொடங்கியது. மூன்று நாள்கள் நடக்கும் இந்த மலர்க் கண்காட்சியில் பல்லாயிரக்கணக்கான மலர்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிறப்பு மலர்க் கண்காட்சியினை இன்று காலை 9 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கிவைத்தார்.

Sponsored


பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் பேசுகையில், 'தமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்' என்று கூறியுள்ளார். சட்டப்பேரவையைக் கூட்ட தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், முதல்வர் இதைப்போல அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Sponsored


 Trending Articles

Sponsored