திண்டுக்கல் சீனிவாசன் மீது ஓ.பி.எஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!Sponsoredசசிகலாவால் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் சீனிவாசன், கோடிக்கணக்கில் கட்சிப் பணத்தைப் பயன்படுத்துவதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க டெல்லி சென்ற ஒ.பன்னீர்செல்வம், செய்தியாளர்களைச் சந்தித்தார். அவருடன் கே.பி.முனுசாமி, மைத்ரேயன் உள்ளிடோர் இருந்தனர். இதுகுறித்து ஓ.பி.எஸ் கூறுகையில், 'ஆர்.கே நகரில் நடந்த பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற டி.டி.வி தினகரன் மற்றும் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோர் மீதான விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளேன்' என்றார். மேலும் அவர், 'நியமன முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவுக்கு, கழகத்தில் எந்த உரிமையும் கிடையாது' என்று கூறினார்.

Sponsored


அதேபோல, 'சசிகலாவால் பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன், கட்சிப் பணத்தைப் பயன்படுத்துவது தவறானது. இது தொடர்பாக வங்கிகளுக்குக் கடிதம் எழுதியும், வங்கிகள் அதைக் கண்டுகொள்ளவில்லை' என்று அவர் கூறியுள்ளார். இதையடுத்து, குடியரசுத் தலைவர் தேர்தல்குறித்து பேசிய அவர், 'குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னர், எங்கள் நிலைப்பாடு அறிவிக்கப்படும்' எனக் கூறினார். இறுதியாக, 'தர்மயுத்தத்தின் கோட்பாட்டிலிருந்து விலகவில்லை' என்று பன்னீர்செல்வம் உறுதிபடக் கூறினார். 
 

Sponsored
Trending Articles

Sponsored