தினகரனுக்கு ஜாமீன் கிடைக்குமா? மே 26ஆம் தேதி தெரியும்Sponsoredஇரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் சிக்கியுள்ள டி.டி.வி தினகரனின் ஜாமீன் மனு மீதான விசாரணையை மே 26ஆம் தேதிக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரு அணிகளாக அதிமுக உடைந்ததால், ஆர்.கே நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. இதையடுத்து, இரட்டை இலைச் சின்னத்தைப் பெற அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டார். லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோரை டெல்லி போலீஸ் கைது செய்து, திகார் சிறையில் அடைத்தனர்.

Sponsored


இந்தநிலையில், ஜாமீன் கேட்டு டி.டி.வி.தினகரன் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.டி.வி.தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனு மீதான விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனு விசாரணையை வரும் 26ஆம் தேதி ஒத்திவைத்தார். அன்றையை தினம் தினகரனுக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது தெரியவரும்.

Sponsored


இதனிடையே, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது சிபிஐ நீதிமன்றம். தினகரனும் சுகேஷும் பேசிய ஆடியோ விவரங்கள் இருப்பதால் மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதி கூறினார்.Trending Articles

Sponsored