வீரலட்சுமி உருவபொம்மை எரிப்பு! மதுரையில் ரஜினி ரசிகர்கள் பதிலடி!Sponsoredமதுரையில் தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமியின் உருவபொம்மையை ரஜினி ரசிகர்கள் எரித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது தனது அரசியல் பிரவேசம் குறித்து அவர் சூசகமாக தெரிவித்தார். இதற்குப் பலவிதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனிடையே இன்று சென்னையில் தமிழர் முன்னேற்றப் படையினர் ரஜினியின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ரஜினி தமிழக அரசியலில் நுழையக் கூடாது எனவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

Sponsored


இந்நிலையில் மதுரையில் ரஜினி ரசிகர்கள், தமிழர் முன்னேற்றப் படை அமைப்பினரை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. மேலும், ரஜினிக்கு எதிராக பேசும் அனைவரையும் கண்டிக்கும் விதமாக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
 

Sponsored
Trending Articles

Sponsored