பா.ஜ.க அமைச்சர் வாகனம் மீது முட்டை வீச்சு!Sponsoredமத்திய பிரதேசத்தில் மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கின் கார் மீது முட்டைகளை வீசி தாக்கியுள்ளனர் காங்கிரஸ் கட்சியினர்.

மத்திய பிரதேசத்தில் கடந்த 6-ஆம் தேதி. விவசாய பொருள்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்யக்கோரி அம்மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 விவசாயிகள் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளைக் கிளப்பியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தன.

Sponsored


இந்நிலையில் இன்று மத்திய பிரதேசம் ஒடிசாவில் மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் கார் மீது முட்டைகள் வீசப்பட்டது. விவசாயிகள் மரணத்தைக் கண்டித்தும், அமைச்சர் பதவி விலகக்கோரியும், காங்கிரஸ் இளைஞரணியைச் சேர்ந்தவர்கள் முட்டைகளை வீசினர். மேலும் கருப்பு கொடிகளை ஏந்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

Sponsored
Trending Articles

Sponsored