'ஓ.பி.எஸ் நடிப்ப பாத்து ஏமாந்துட்டேன்' - பரிதி இளம்வழுதி பரபர!ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்து டி.டி.வி.தினகரன் அணிக்கு சென்றுள்ளார் பரிதி இளம்வழுதி. தி.மு.க.,வின் முக்கிய உறுப்பினரும், தி.மு.க முன்னாள் அமைச்சருமான பரிதி இளம்வழுதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அரசியலில் அமைதியாக இருந்து வந்தார். இந்நிலையில், சசிகலா - ஓ.பன்னீர் செல்வத்தின் பிரிவின்போது, ஓ.பி.எஸ் அணியின் பக்கம் சென்றார் பரிதி இளம்வழுதி. இந்நிலையில், இன்று பன்னீர் செல்வத்தின் அணியில் இருந்து டி.டி.வி.தினகரனின் அணி பக்கம் வந்துள்ளார் பரிதி. 

Sponsored


இதுகுறித்து பேசியுள்ள பரிதி இளம்வழுதி, 'ஓ.பன்னீர் செல்வத்தின் நடிப்பை பார்த்து ஏமாந்துவிட்டேன். சிவாஜி கணேசனைவிட பெரிய நடிகர் ஓ.பி.எஸ். அ.தி.மு.கவை வலுப்படுத்த சரியான தலைவர் டி.டி.வி.தினகரன்தான். கட்சியிலிருந்து பிரிந்துபோன பல முக்கிய நிர்வாகிகள் இனி தினகரனை சந்திக்க வருவார்கள்', என்றார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored