'தேர்ந்தெடுத்த மக்களை கொச்சைப்படுத்திவிட்டார்கள்'... மு.க.ஸ்டாலின் ஆவேசம்!



Sponsored



3 தி.மு.க எம்.எல்.ஏக்களைக் கைது செய்து, அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களைக் கொச்சைப்படுத்திவிட்டது அ.தி.மு.க அரசு என கூறியுள்ளார் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

புதுக்கோட்டையில் 9 ஆம் தேதி, புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை திறப்பு விழா வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க சென்ற தி.மு.க எம்.எல்.ஏக்கள் பெரியண்ணன் அரசு, ரகுபதி, சிவமெய்யநாதன் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்கு தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனங்களைத் தெரிவித்ததோடு, புதுக்கோட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.

Sponsored


இதனிடையே, இன்று புதுக்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், 'அ.தி.மு.க அரசு எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்யவில்லை. அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களைக் கொச்சைப்படுத்தியுள்ளது' எனக் கூறினார். மேலும், 'முதலில் அச்சடிக்கப்பட்ட விழா அழைப்பிதழில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் பெயர் இல்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட பின்பு தான் அழைப்பிதழில் பெயர் சேர்க்கப்பட்டது. தி.மு.க எம்.எல்.ஏக்கள் விழாவில் கலந்து கொண்டால் அ.தி.மு.க குறித்த உண்மைகளைப் பேசிவிடுவார்கள் என்று ஆளும்கட்சி அச்சமடைந்துள்ளது' என அவர் தெரிவித்தார். இந்நிலையில், புதுக்கோட்டையில் திறக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிக்கு, தி.மு.க ஆட்சியில் தான் நிதி ஒதுக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டது என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
 

Sponsored




Trending Articles

Sponsored