கட்சிப் பெயரை மாற்றுகிறார் ஜெ.தீபா!தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் எதையோ செய்துகொண்டிருக்கிறார் ஜெ.தீபா என்று ஏற்கெனவே விமர்சனங்களுக்குள்ளாகி வரும் நிலையில் தற்போது தனது கட்சி பெயரையும் மாற்றுகிறார். 

Sponsored


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, ஜெயலலிதா மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த போதே அவரைப் பார்க்க தன்னை அனுமதிக்கவில்லை என்று சசிகலா தரப்பினரை எதிர்க்க ஆரம்பித்தார். 

Sponsored


இந்த நிலையில் அவர் தொடங்கிய எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரை அதிமுக ஜெ.தீபா அணி என்று பெயர் மாற்றம் செய்வதாகத் தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கு உரிமை கோரவும், போயஸ் கார்டனுக்கு உரிமை கோரவும் தனக்குதான் உரிமை இருக்கிறது என்று பேசி வருகிறார். மேலும் அதிமுக கட்சிக்கு உரிமை கோருவது தொடர்பான பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்ய திங்கள்கிழமை வரை அவகாசம் கொடுத்துள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களை யார் வேண்டுமானாலும் கையில் வைத்திருக்கலாம். தொண்டர்கள்தான் பலம். அந்தப் பலம் தங்களிடம்தான் இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.  

Sponsored
Trending Articles

Sponsored