ஆளுநரின் அதிகாரங்களைப் பறிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்- புதுவை முதல்வர் நாராயணசாமி அதிரடி!Sponsoredபுதுச்சேரி அரசியலில் முதல்வருக்கும் கவர்னருக்கும் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், கவர்னரின் அதிகாரங்களைப் பறிக்கும் அதிகாரம் முதல்வருக்கு உண்டு என்ற வகையிலான தீர்மானம் புதுச்சேரி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள கிரண் பேடி தொடர்ந்து அரசு மற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து வருவதோடு, கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். அரசு நடவடிக்கைகளை அந்தந்த இடங்களுக்குச் சென்று நேரில் பார்ப்பது, அடிக்கடி அதிகாரிகளைக் கூட்டிப் பேசுவது என்று அதிரடி காட்டி வருகிறார். அதேசமயம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் ஆகியவற்றிலும் அவருடைய கருத்துகளும், நடவடிக்கைகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துவதால் புதுச்சேரி அரசு மற்றும் முதல்வர் நாராயணசாமி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

Sponsored


ஆளுநர் கிரண்பேடியின் இதுபோன்ற செயல்களால் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்பட அரசியல்வாதிகள், அதிகாரிகள் எரிச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். எனவே புதுச்சேரி சட்டமன்றத்தில் ஆளுநரின் அதிகாரங்களைக் குறைப்பதற்கான அதிகாரம் முதல்வருக்குத் தரும் வகையிலான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருக்கிறார்கள். இதனால் புதுச்சேரி அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது. 
 

Sponsored
Trending Articles

Sponsored