'ஆட்டிறைச்சி சாப்பிடும்போது மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாதா..?' விஜயகாந்த் கேள்விSponsoredஆட்டிறைச்சி சாப்பிடும்போது மாட்டிறைச்சியைச் சாப்பிடக் கூடாதா என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்று சென்னையிலுள்ள தே.மு.தி.க அலுவலகத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் விழா நடைபெற்றது. இதில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட கழகத்தினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய விஜயகாந்த், 'இப்போது மாட்டிறைச்சி கூடாது என்று சொல்கிறார்கள். சில நாள் கழித்து கோழி, ஆடு, மீன் இறைச்சி சாப்பிடக் கூடாது என்று சட்டம் போட்டாலும் போடுவார்கள்' எனக் கூறியுள்ளார்.

Sponsored


மேலும், 'மக்கள் அவரவர் விரும்பும் உணவை உண்ணும் முழு உரிமை உள்ளது. அதை யாரும் தடுக்க முடியாது' என்று அவர் கூறியுள்ளார். கட்சியின் செயல்பாடு குறித்து பதிலளித்த விஜயகாந்த், 'தொண்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். நான் மறுபடியும் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் அமர்வேன்' எனத் தெரிவித்துள்ளார்.

Sponsored
Trending Articles

Sponsored