ட்விட்டரில் இணைந்தார் மீரா குமார்Sponsoredஎதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான மீரா குமார், ட்விட்டரில் புது வரவாக இணைந்துள்ளார்.


தற்போதைய குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதையடுத்து, நாட்டின் புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஜூலை மாதத்தில் நடைபெற இருக்கிறது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்த பிறகு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

Sponsored


இந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மீரா குமார், சமூக வலைதளமான ட்விட்டரில் புதிதாக இணைந்துள்ளார். ட்விட்டரில் தனது முதல் பதிவாக ரமலான் வாழ்த்துகளைக் கூறி,  'மகிழ்ச்சியும் அமைதியும் அனைவரது வாழ்விலும் செழிக்கட்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Sponsored


மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ், சமீபத்தில்  மீராகுமார் குறித்த வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். அதில், 2013ல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சுஷ்மா, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஊழல்கள்குறித்து பேசும்போது, அப்போது சபாநாயகராக இருந்த மீரா குமார் குறுக்கீடுசெய்வது போன்ற வீடியோவைப்  பதிவிட்டிருந்தார். 'நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரை மீரா குமார் எப்படி நடத்தினார் என்பதைப் பாருங்கள்' என்று சுஷ்மா குறிப்பிட்டிருந்தார். Trending Articles

Sponsored