சுஷ்மா வீடியோவுக்கு காங்கிரஸ் பதில் வீடியோ



மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் வீடியோ குற்றச்சாட்டுக்குப் பதிலடியாக காங்கிரஸ், ட்விட்டரில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது

Sponsored



காங்கிரஸின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக மீரா குமார் அறிவிக்கப்பட்ட பிறகு, மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு 'நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரை மீரா குமார் எப்படி நடத்தினார் என்பதைப் பாருங்கள்', என்று குறிப்பிட்டிருந்தார்.  2013-ம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஊழல்கள்குறித்து சுஷ்மா பேசும்போது, அப்போது சபாநாயகராக இருந்த மீரா குமார் குறுக்கிடுவதாக அந்த வீடியோ இருந்தது.

Sponsored


இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியும் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், சபாநாயகர் பதவியிலிருந்து மீரா குமார் விடைபெறும் நிகழ்ச்சியில், சுஷ்மா அவரைப் பாராட்டிப் பேசியதையும் அதில், 'நான் மீரா குமாரின் ரசிகை' என்று அவர் கூறுவதையும் வீடியோவாகத் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளது.

Sponsored




Trending Articles

Sponsored