குழு கலைக்கப்பட்டாலும் பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது! அமைச்சர் ஜெயக்குமார் கலகல



Sponsored



பேச்சுவார்த்தைக் குழுக்கள் கலைக்கப்பட்டாலும் இணைப்புப் பேச்சுவார்த்தைத் தொடர்ந்து நடந்துவருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என்று பிரிந்தது. சசிகலாவின் கைதுக்குப் பின்னர், இரு அணிகளும் பேச்சுவார்த்தை முயற்சியில் ஈடுபட்டன. இதற்கிடையில், பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் குழுக்கள் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால், இரு அணிகளும் இணைவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதுகுறித்து இன்று அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "பேச்சுவார்த்தைக் குழுக்கள் கலைக்கப்பட்டாலும் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைப்புக்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்துவருகிறது. ஓ.பன்னீர்செல்வம் அணியின் முக்கிய நிர்வாகிகள், முதல்வரைச் சந்தித்தனர். நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கையும் உள்ளது. கட்சியை வழிநடத்த ஏழு பேர் கொண்ட குழுவும் ஏற்பட்டுள்ளது'' என்று  கூறியுள்ளார். குழுக்கள் கலைக்கப்பட்டது பற்றி கேட்டதற்கு, 'குழு வேறு... இணைப்பு என்பது வேறு' என்று தெரிவித்தார். 

Sponsored


Sponsored




Trending Articles

Sponsored