ஒரே வரியா அல்லது வரிக்கு வரியா?; ஒரு ஜிஎஸ்டி விளக்கம்



Sponsored



ஜிஎஸ்டி வரி குறித்த தெளிவான விளக்கம், துறை சார்ந்தவர்களிடமிருந்து இன்னும் கிடைக்கப் பெறாததால் தொடர்ந்து பல்வேறு குழப்பங்கள் நீடித்துக்கொண்டு இருக்கிறது. 


ஜூலை 1-ம் தேதி சமூக வலைதளங்களில் தாங்கள் வாங்கிய பொருள்களின் 'பில்'களை இணையதளங்களில் பகிர்ந்து வந்தனர். அதில் சிலர் உணவகங்களில் சாப்பிட்ட 'பில்'களையும் பதிந்து வந்தனர். பில் தொகையான ரூபாயுடன் இரண்டு ஜிஎஸ்டி வரிகளும் சேர்க்கப்பட்டிருந்தது. அதில் முதலாவது மத்திய அரசின் சென்ட்ரல் ஜிஎஸ்டி(CGST), இரண்டாவது மாநில அரசின் ஸ்டேட் ஜிஎஸ்டி(SGST) என்பதாகும். அதாவது, அறிவிக்கப்பட்ட வரி இரண்டாகப் பிரித்து போடப்பட்டு வருகின்றது. இரண்டுக்கும் அறிவிக்கப்பட்ட வரி பாதி பாதியாக வசூலிக்கப்படுகிறது. 

Sponsored


அதாவது, 40 ரூபாய் தொகைக்கு, 12 சதவீதம் வரியாக வசூலிக்கப்பட்டால், 4.80 ரூபாய் வரும். இதுதான் 6% + 6% என மத்திய மற்றும் மாநில ஜிஎஸ்டியாக வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், சில 'பில்'களில் முதலில் வரும் மத்திய ஜிஎஸ்டியில் 6% ரூபாய் 2.40 என்றும் இரண்டாவது வரியான மாநில ஜிஎஸ்டியில் இந்த 2.40 யும் சேர்த்து மொத்தம் 42.40 ரூபாய்க்கு 6% ஆக 2.54 ரூபாய் என்று போடப்பட்டுள்ளது. அதாவது, மொத்தமாக 4.94 ரூபாய் வரியாக வருகிறது. 

Sponsored


இதுகுறித்து பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா கூறுகையில், 'இது முற்றிலும் தவறான முறை. ஒரே வரிதான், பிரித்து வசூலிக்கப்படுகிறது. எனவே, இரண்டு வரிகளிலும் வாங்கப்பட்ட பொருள்களுக்கு மட்டும்தான்  வரி வசூலிக்க வேண்டும்' என்றார். 

இதனால், பொதுமக்கள் பொருள்கள் வாங்கும்போது கவனமாக இதைக் கருத்தில் கொள்ள வேண்டும். சிறிய அளவில் பொருள்கள் வாங்கும்போது அதிக பிரச்னை இல்லை. ஆனால், பெரிய தொகையில் வாங்கும்போது  பில் தொகையில் கணிசமான வித்தியாசம் இருக்கும்.



Trending Articles

Sponsored