சி.எம் ஹெல்ப்லைன்: யோகியின் அடுத்த திட்டம்!



உத்தரப்பிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு, தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தற்போது, குறைகளைக் கண்டறிவதற்காகப் புதிய உதவி எண் திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளார்.

Sponsored



உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், மக்களின் குறைகளைக் கண்டறிவதற்காகத் தனது தலைமையில் புதிய திட்டத்தைத் தொடங்க உள்ளார். 'சி.எம் ஹெல்ப்லைன்' என்ற அந்தத் திட்டத்தின் மூலமாக, மக்கள் தங்கள் குறைகளைத் தொலைபேசி மூலமாகத் தெரியப்படுத்தாலம். இது, முதல்வரின் நேரிடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். 

Sponsored


இந்தத் திட்டம், மத்தியப் பிரதேச மாநிலத்தின் திட்டதை முன்மாதிரியாகக்கொண்டு செயல்படுத்தப்படுவதால், உ.பி- யிலிருந்து அதிகாரிகள் குழு ஒன்று மத்தியப்பிரதேச மாநிலத்துக்குச் சென்று, அங்கே எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதைப் பார்த்துவந்து இங்கே பணிகளை மேற்கொள்கிறது. இது, முதல்வர் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Sponsored


ஏற்கெனவே, இங்கு இணையதளம் மூலம் மக்கள் தங்கள் குறைகளைத் தெரியப்படுத்தாலம் என்ற திட்டம் அமலில் உள்ளது. மாநிலத்தில் இணையதளம் பயன்படுத்தத் தெரியாதவர்கள் எவ்வாறு குறைகளைத் தெரியப்படுத்த முடியும் என்ற கேள்வி எழுந்ததால், அனைவரும் எளிமையாகக் குறைகளைத் தெரியப்படுத்த, இந்தத் திட்டத்தைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. ஒரு குறை பதிவுசெய்யப்பட்டால், அந்தக் குறை சார்ந்தவர்கள் எடுத்த நடவடிக்கை வரை, முதல்வர் அலுவலகம் கண்காணிக்கும் முறையில் இந்தத் திட்டம் வகுக்கப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
 



Trending Articles

Sponsored