இதுகுறித்து பேசவே கூடாது! அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்குத் தடை போட்டது உயர் நீதிமன்றம்Sponsoredதமிழக பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் ராஜேந்திர பாலாஜி, ‘தனியார் பால் நிறுவனங்கள் பாலில் ஹைட்ரஜன் பெராக்சைடு, பார்மாலின் உள்ளிட்ட ரசாயனத்தைக் கலக்கின்றன. அந்தப் பாலைக் குடித்தால் புற்றுநோய் ஏற்படும்” எனத் தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பினார்.


இந்நிலையில், அமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டை எதிர்த்து தனியார் நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், "அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் மீது ஆதாரம் இல்லாமல் கலப்படம் குறித்து பேசக்கூடாது" என்று தடை விதித்ததோடு, பால் கலப்பட விவகாரத்தில் உண்மை இருக்கும் பட்சத்தில் அது குறித்து பேசலாம். ஆனால், ஆதாரம் இல்லாமல் பேசினால் அது மக்களிடம் அச்சத்தை உண்டாக்கும் என்று தெரிவித்துள்ளது. 

Sponsored


ஹட்சன், டோட்லா மற்றும் விஜய் ஆகிய தனியார் பால் நிறுவனங்கள் அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நான்கு வாரத்துக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored