வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க ஆதாரை அதிகமாகப் பயன்படுத்துங்கள் - பிரதமர் மோடிSponsoredஇந்தியாவில் ஊழலை ஒழிக்கவும் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவும் ஆதாரை அதிகமாகப் பயன்படுத்துமாறு, தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.


இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மாநாடு, நேற்று புது டெல்லியில் நடந்தது. அதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், "முன்னுரிமை அளிப்பது மற்றும் அணுகுமுறை ஆகியவை ஆட்சிக்கு மிக முக்கியம்.

Sponsored


உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை நம்புகின்றன. அவர்கள், இந்தியாவோடு இணைந்து தொழில் செய்ய விரும்புகிறார்கள். அதனால், மாநிலத்தில் தொழில் தொடங்க எளிமையான நடைமுறைகளை ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்குங்கள்" என்று பிரதமர் மோடி தலைமைச் செயலர்களைக் கேட்டுக்கொண்டார். 

Sponsored


விவசாயத்துறை பற்றிப் பேசிய மோடி, விவசாயத்துக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அவசியமானது என்றும் அதை மாநிலங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், "வரும் 2022-ல் இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகும். அதை இலக்காகக்கொண்டு, ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு நாம் அனைவரும் பணியாற்ற வேண்டும்" என்றார். 

இந்த நிகழ்ச்சியில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.Trending Articles

Sponsored