வெங்கைய நாயுடு ராஜினாமா- இலாகாக்கள் மாற்றியமைப்புSponsoredதுணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளரான வெங்கைய நாயுடு, அவரது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவரது இலாகாக்கள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.


பாரதிய ஜனதா கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார் வெங்கைய நாயுடு. இன்று வேட்புமனு தாக்கல் செய்த அவர்,  தான் கவனித்துவந்த தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகிய துறைக்கான அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது இந்த இரண்டு துறைகளும், கூடுதல் பொறுப்பாக ஸ்மிரிதி ராணி மற்றும் நரேந்திர தோமர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஸ்மிரிதி ராணி ஜவுளித்துறை அமைச்சராக உள்ளார். தற்போது அவர், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையைக் கூடுதலாகக் கவனிப்பார். 

Sponsored


அதேபோன்று நரேந்திர தோமரும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைக்கு அமைச்சராக இருந்துவந்தார். தற்போது அவர், கூடுதலாக நகர்ப்புற வளர்ச்சித் துறையையும் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Sponsored


ஏற்கெனவே, மத்திய அமைச்சர்கள் பலர் கூடுதல் பொறுப்புகளைக் கவனித்துவருகின்றனர். தற்போது நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்ததும், அமைச்சரவை இலாகாக்கள் மாற்றி அமைக்கப்படும் எனத் தெரிகிறது. அப்போது, புதியவர்கள் சிலர் அமைச்சர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
 Trending Articles

Sponsored