'கமல்ஹாசன் கூறியதில் என்ன தவறு?' - விளாசும் விஜயகாந்த்Sponsoredகதிராமங்கலத்தில் மக்கள்  ஓ.என்.ஜி.சி-க்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். பல்வேறு துறைகளிலிருந்து தலைவர்கள், மக்கள் எனத் தினமும் கதிராமங்கலம் வந்து தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், இன்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மற்றும் அவர் மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கதிராமங்கலம் வந்து தங்களது ஆதரவை மக்களுக்குத் தெரிவித்தனர். போராட்டத்தில் கைது செய்தவர்களை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதம் இருந்து வருபவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். 
"மக்களின் ஆதரவு இல்லையெனில், திட்டத்தை தூக்கியெறிய வேண்டியது அரசின் கடமை. வெளிநாடுகளில் மக்கள் வாழாத இடங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன" என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Sponsored


Sponsoredபோராட்டக்காரர்கள் மத்தியில் பேசிய விஜயகாந்த், "இந்தத் திட்டம் மக்களுக்கான திட்டம் இல்லை. மக்களுக்காகத் தான் திட்டங்கள் இருக்க வேண்டும். இது மாதிரியான திட்டங்கள் இங்கு வந்ததுக்கு தி.மு.க , அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் பங்கு உண்டு.  பிரச்னையைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதுக்காக கதிராமங்கலத்துக்கு நான் வரவில்லை. இந்த பிரச்னைக்குப் போராட்டம் மூலமாகவே தீர்வு காண முடியும். உங்களின் போராட்டத்துக்கு எங்களின் ஆதரவு கண்டிப்பாக உண்டு" என்றார்.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் இருக்கிறது என்று கமல்ஹாசன் கூறியது முழுக்க முழுக்க உண்மை எனவும் விஜயகாந்த் கூறினார். 
 Trending Articles

Sponsored