நீட் தேர்வு: அவசர சட்ட வரைவை ஏற்றது மத்திய உள்துறைSponsoredஇந்த ஆண்டு முதல் இந்தியா முழுவதும் மருத்துவப் பட்டப் படிப்புக்கு, பொது நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நடந்து முடிந்த இந்தத் தேர்வில், வெவ்வேறு மொழிகளில் கேட்கப்பட்ட கேள்விகளில் வித்தியாசம் இருந்தது. ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிதாக இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இந்த நிலையில், தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களில் பெரும்பாலானோர் நீட் தேர்வில் தேர்ச்சிபெற முடியவில்லை. அதிகப்படியாக, சி.பி.எஸ்.இ பாடப் பிரிவில் படித்த மாணவர்களே தேர்வாகினர். இந்த நிலையில், தமிழக அரசு உள் ஒதுக்கீடு அரசாணை ஒன்றைப் பிறப்பித்தது. அதன்படி மாநிலப் பாடப் பிரிவில் படித்த மாணவர்களுக்கு, 85 சதவிகித இடங்களும், சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு 15 சதவிகித இடங்களும் ஒதுக்கப்பட்டது. 

Sponsored


இந்த அரசாணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. கடைசி முயற்சியாக, ஓராண்டு மட்டும் தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் அவரச சட்ட மசோதாவை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியது தமிழக அரசு. இன்று, கூடுதல் ஆவணங்களை சமர்ப்பித்தது தமிழக சுகாதாரத்துறை. தற்போது, உள்துறை அமைச்சகத்தில் தமிழக அரசின் அவசர சட்ட வடிவு ஏற்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், மத்திய  சுகாதாரத்துறை மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்த பிறகு, மீண்டும் உள்துறை அமைச்சகத்தின்மூலம் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படும்.

Sponsored


குடியரசுத்தலைவரின் ஒப்புதல் கிடைத்ததும், தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு அளிக்கும் மசோதா முழுமையாக நிறைவேற்றப்படும்.Trending Articles

Sponsored