ஓ.பன்னீர்செல்வத்துக்கு  பிரதமர் மோடி வாழ்த்து!Sponsoredதமிழக துணை முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர் செல்வத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரின் அணிகள் இன்று இணைந்தன. இதையடுத்து அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர், நிதி அமைச்சர் பதவியும், பாண்டியராஜனுக்கு தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையும் வழங்கப்பட்டன. மாலை இருவருக்கும் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ்  பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பின்னர் இருவரும் தலைமைச் செயலகத்தில் வந்து பொறுப்பேற்றுக்கொண்டனர்.

Sponsored


இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, துணை முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர் செல்வத்துக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தனது  ட்விட்டர் பக்கத்திலும் பன்னீர் செல்வம் உள்ளிட்டோருக்கு வாழ்த்துகள் என பகிர்ந்திருந்தார்.

Sponsored


இது குறித்து துணை முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாரத பிரதமர் நரேந்திர மோடி தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தாகவும், தமிழகத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தாகவும்" குறிப்பிட்டுள்ளார்.Trending Articles

Sponsored