"ஓ. பன்னீர்செல்வமும், பழனிசாமியும் துரோகிகள், எனது அரசியல் பயணம் தொடரும்"- ட்விட்டரில் அதிரடி காட்டிய தினகரன்Sponsoredஅ.தி.மு.க-வில் அடுத்தடுத்து திருப்பங்கள் நடந்துவருகின்றன. இரு துருவங்களாக இயங்கிவந்த எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் இணைந்துவிட்டனர். பன்னீர்செல்வத்துக்கு ஆட்சியிலும் கட்சியிலும் பதவிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், இன்று மாலை திடீரென்று டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு முன்பாக தியானம் செய்தனர். 

Sponsored


Sponsoredஇந்நிலையில், டி.டி.வி தினகரன், ட்விட்டரில் அ.தி.மு.க அணிகள் இணைந்தது குறித்து அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.  அதில், "இன்று நடந்தது இணைப்பே அல்ல. சில நபர்களின் சுயலாபத்துக்காகவும் பதவி ஆசைக்காகவும் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்குமான வணிக ரீதியான உடன்படிக்கை. இந்த உடன்படிக்கை எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது எல்லாம் வல்ல இறைவனுக்கே வெளிச்சம். 
1989-ல் தொண்டர்களின்  விருப்பத்துக்கு இணங்க, அம்மா அவர்களைப் பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டு, அவர் தலைமையில் ஒன்றிணைந்தார்கள். இன்றோ, இவர்களாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுச்செயலாளரை நீக்குவோம் என்ற அறிவிப்போடு ஏற்பட்டுள்ள உடன்படிக்கை தொண்டனால் ஜீரணிக்க முடியாத துரோகம். அம்மா அவர்களின் மறைவுக்குப் பின் பன்னீர்செல்வத்தையும், பழனிசாமியையும் முதல்வராக்கிய பொதுச்செயலாளருக்கு துரோகம் செய்த நபர்களை கழகத் தொண்டர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் மன்னிக்க மாட்டார்கள். 

இரட்டை இலை முடங்குவதற்கு காரணமான பன்னீரோடு கைகோக்கும் அளவுக்கு சிலரது பதவி வெறி கண்ணை மறைக்கிறதென்றால் எப்படி தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். இந்தத் துரோகிகளால் எப்படி இரட்டை இலையை மீட்க முடியும்? நேற்று வரை ஊழல் ஆட்சி நடைபெறுவதாக சொன்ன பன்னீர்செல்வத்தோடு எப்படித்தான் இவர்களால் இன்றைக்கு கைக்கோக்க முடிகிறதோ? இந்த துரோகிகளால் ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்குவதற்காகவே, கோடான கோடி கழகத் தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று எனது அரசியல் பயணம் தொடரும். துரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை; துரோகத்தை வேரறுப்போம்! கழகத்தை காப்போம்" என்று கூறியுள்ளார்.Trending Articles

Sponsored