மயிலாடுதுறையில் 177 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி புஷ்கரம் விழா!Sponsoredநாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள துலாக்கட்டத்தில் செப்டம்பர் 12-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை மஹா புஷ்கர விழா நடைபெற உள்ளது. 177 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கோலாகல விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

கங்கையில் தினமும் நீராடினால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அந்த புண்ணியம் மயிலாடுதுறை துலாகட்ட காவிரி ஆற்றில் புனித நீராடினால் கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.

Sponsored


இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு புனித நீராடுகிறார் என்று ஓ.எஸ்.மணியன் அறிவித்திருந்தார். இவ்விழாவுக்கான 80 சதவிகித வேலைகள் முடிவடைந்துவிட்டன. இந்நிலையில், விழா நடைபெறும் 12 நாள்களில் நடைபெற உள்ள சிறப்பு கலைநிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தினமும் மாலை 5 மணி முதல் 9 மணி வரை கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

Sponsored


நிகழ்ச்சிகளின் விவரங்கள்:

செப்-12: காஞ்சி சங்கராச்சாரியர்கள் பங்கேற்கும் விருது வழங்கும் விழா. இதைத் தொடர்ந்து டாக்டர்.கணேஷின் பக்திப்பாடல்கள்.

செப்-13: திருவானைக்காவல் ஓதுவார் சிவசம்பவாரின் தேவார இன்னிசை, மணிக்கண்டனின் சொற்பொழிவு.

செப்-14: காஞ்சி ஜெயேந்திர சுவாமிகளுக்கு புஷ்பாஞ்சலி, மும்பை கல்யாண சுந்தரம் வழங்கும் "சரணம் தேவி காவிரி" பரதநாட்டிய நிகழ்ச்சி.

செப்-15: பாம்பே பெண்கள் குழுவினரின் "சவுந்தர்ய லஹரி பாராயணம்" , அனந்தராமன் குழுவினரின் பக்திப்பாடல்கள்.

செப்-16: கோயில் பூசாரிகளின் ஊர்வலம், காமேஷ் வயலின், உமையாள்புரம்  மாலி மிருதங்கத்துடன் சூர்யபிரகாஷின் வாய்ப்பாட்டு, கலாமித்ரா ராம்ஜியின் ஸ்ரீமகா பெரியவா நாடகம்.

செப்-17: மடிப்பாக்கம் மாலினி, பாலாஜி குழுவினரின் பரதநாட்டியம், கடலூர் கோபி பாகவதரின் "பாகவத லீலைகள்" பஜனை.

செப்-18: சோ.சோ.மீ.சுந்தரத்தின் "கடவுளை காட்டும் காவிரி" சொற்பொழிவு, வீரமணி ராஜூவின் பக்தி இன்னிசை.

செப்-19: திருக்குறள் ஒப்பித்தல், கோவை ஜெயராம பாகவதரின் பஜனை.

செப்-20: லஷ்மி பிரியா நடன குழுவினரின் "பாவங்கள் போக்கும் காவிரி" நடன நிகழ்ச்சி, கடையநல்லூர் ராஜகோபால் பாகவதரின் பஜனை.

செப்-21: ஜெயலட்சுமி சேகரின் வீணை இசை, திருச்சி கல்யாண ராமனின் "கங்கையிற் புனிதமான காவிரி" சொற்பொழிவு.

செப்-22: காரைக்குடி பைரவ குருக்களின் தேவார இன்னிசை, டாக்டர் ஹுசைனின் "காவிரியும் கடவுளும்" சொற்பொழிவு.

செப்-23: பால நந்தகுமாரின் லயஷேத்திரா நடனம், ஹரிஹரன்- களக்காடு பாலாஜி குழுவினரின் பக்தி இன்னிசை.

செப்-24: காவிரி ஆரத்தி நிகழ்ச்சி, "நடந்தாய் வாழி காவிரி" கவியரங்கம்.   

பன்னிரண்டு நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் ஏராளமான பிரபலங்களும் பொதுமக்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு இவ்விழா 2161-ம் ஆண்டு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.Trending Articles

Sponsored