தினம் தினம் திருநாளே! தினப் பலன் ஆகஸ்ட் 27-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புகளுடன்Sponsoredதினம் தினம் திருநாளே!
தினப் பலன் - ஆகஸ்ட் -27 
'ஜோதிடஶ்ரீ'முருகப்ரியன்

மேஷம்: மனதில் உற்சாகம் பெருகும். தாய் வழி உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். சிலருக்கு எதிர்பாராத பயணங்களும் ஏற்படும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். திடீர் பணவரவும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

Sponsored


அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

Sponsored


ரிஷபம்: தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர் வருகையும், அவர்கள் மூலம் சுபச்செய்தியும் கிடைக்கும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடம்  ஏற்படக்கூடும்.

மிதுனம்: உற்சாகமான நாள். கணவன் - மனைவியரிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

கடகம்:  சகோதர வகையில் அனுகூலம் ஏற்படும். சிலர் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மேலும் சுபச்செலவுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடன் வாங்குவது மற்றும் கொடுப்பதைத்  தவிர்ப்பது நல்லது.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும்.

சிம்மம்: மனதில் சிறு அளவில் சோர்வு ஏற்படும். எதிர்பார்த்த நல்ல தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நன்மை அளிக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படக்கூடும்.

கன்னி: இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல தகவல் வந்து சேரும். வாகனப் பழுது ஏற்பட வாய்ப்பு உண்டு.  பயணத்தின்போது கவனம் அவசியம். நீண்டநாள்களாக கொடுத்து திரும்ப வராமல் இருந்த கடன் தொகை இன்று திரும்பக் கிடைக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

துலாம்: உற்சாகமான நாள். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சி எதுவும் இன்றைக்கு வேண்டாம். நண்பர்களிடம் கனிவாகப் பேசி உங்கள் காரியங்களை திறமையாக முடித்துக் கொள்வீர்கள். பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத விருந்தினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் அனுக்கிரகமும் கிடைக்கும்.

விருச்சிகம்: வீடு, மனை வாங்க நினைத்த முயற்சி இன்று சாதகமாக முடியும். வாழ்க்கைத் துணை யின் வழியில் பண உதவி கிட்டும். எதையும் பொறுமையாக யோசித்து முடிவெடுப்பது நல்லது. திடீர் பயணங்கள் ஏற்படக்கூடும். சகோதரர்களால் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி இருக்கும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாய்வழியில் சிறு சங்கடங்களைச் சந்திக்கவேண்டி வரும்.

தனுசு: இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சிறப்புப் பணிகளின் காரணமாக ஓய்வு எடுக்க முடியாமல் அலுவலகத்துக்குச் செல்ல நேரிடும். பிறருடன் வாக்குவாதம் தவிர்க்கவும். மாலையில் மனச் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

மகரம்: இன்று அதிகரிக்கும் செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரும். உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளால் பெருமை சேரும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த நல்ல செய்தி இன்றைக்குக் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை உண்டாகும்.

கும்பம்: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாய் வழி உறவுகளிடம் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். உறவினர்களின் திடீர் வருகையால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

மீனம்: வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு உதவி செய்வார்கள். எதிர் பார்த்த பணவரவு உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பயணங்களையும் தவிர்க்கவும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.Trending Articles

Sponsored