தினம் தினம் திருநாளே! தினப் பலன் ஆகஸ்ட் 29-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புகளுடன்




தினம் தினம் திருநாளே!
தினப் பலன் - ஆகஸ்ட் 29 - செவ்வாய்க்கிழமை
'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்

Sponsored


மேஷம்: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச்  சாதகமாக முடியும். இன்று பிற்பகலுக்குள் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. 
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மைகள் உண்டாகும்.

Sponsored


ரிஷபம்:  இன்று எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும், சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வெளியூர்களில் இருந்து  சுபச் செய்திகள் வரும்.  

Sponsored


மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் நன்மை உண்டாகும்.

மிதுனம்: உற்சாகமான நாள். வராது என்று நினைத்திருந்த  கடன் தொகை திரும்பக் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். 

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

கடகம்:  புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். 

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

சிம்மம்: எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளிநாடுகளில் இருந்து வரும்  செய்தி  உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பேச்சிலும் செயலிலும் பொறுமை அவசியம்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

கன்னி:  வெளியூர்களில் இருந்து  சுபச் செய்திகள் வரும். மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.  

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

துலாம்: உற்சாகமான நாளாக இருக்கும். எதிர்பார்க்கும் பணம் கைக்கு வரும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். வழக்கில் தீர்ப்பு சாதகமாகக் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் சிலருக்கு காரியங்களில் தடை தாமதம் ஏற்படக்கூடும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரியோர்களின் ஆசிகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்.

விருச்சிகம்: இன்றைய நாள்  உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். 

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு உண்டாகும்.

தனுசு:  காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகள் வெற்றி அடையும். காணாமல் போன பொருள் திரும்பக் கிடைக்கும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளவேண்டாம்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.

மகரம்: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும்.   உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை  ஆபரணங்கள் வாங்குவீர்கள். 

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

கும்பம்: அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும்  ஏற்படும். முயற்சிகளில் வெற்றியும்  பண லாபமும் உண்டாகும். பிற்பகலுக்குமேல் எதிர்பாராத சிலரை சந்திக்க நேரிடுவதும், அதனால் மனதில் மகிழ்ச்சி ஏற்படவும் கூடும். 

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டாகும்.

மீனம்: புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு.கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். 

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.



Trending Articles

Sponsored