காவிரி மகா புஷ்கரத்துக்கான பந்தல்கால் முகூர்த்தம்Sponsoredநாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள துலாக்கட்டத்தில் "காவிரி மகா புஷ்கர விழா" நடைபெற உள்ளது. இவ்விழா செப்டம்பர் 12-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறும்.

இதன் தொடக்கமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காவிரி புஷ்கர விழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதற்கு காவிரி புஷ்கர கமிட்டித் தலைவரும், அகில பாரத துறவியர்கள் சங்கச் செயலாளருமான சுவாமி ராமானந்த மகாராஜ் தலைமை வகித்தார்.

இதில், ஒருங்கிணைப்பாளர் மகாலஷ்மி சுப்ரமணியன், செயலாளர் முத்துக்குமார சாமி, துணைத் தலைவர்கள் ஜெகவீரபாண்டியன், தமிழ்செல்வன், செந்தில்வேல், இணைச் செயலாளர் அப்பர்சுந்தரம், பொருளாளர் சீத்தாராமன், இணைப் பொருளாளர் பாபுவெங்கட்ராமன், கண்காணிப்பாளர் குருசங்கர், திருப்பணி பொறுப்பாளர் மகாகாவிரி சந்திரசேகரன், பந்தல் ஒப்பந்ததாரர் பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Sponsored


விழா நடைபெறும் 12 நாள்களும், காஞ்சி சங்கராச்சாரியார்கள், தருமை, திருவாடுதுறை, திருப்பனந்தாள் உள்ளிட்ட ஆதீனங்கள் மற்றும் நாடு முழுவதுமிருந்து வரும் ஆயிரக்கணக்கான துறவியர்கள், மடாதிபதிகள் பங்கேற்க உள்ளனர்.

Sponsored


விழா நடைபெறும் நாள்களில் பக்தர்கள் கண்டுகளிக்க பல்வேறு வகையான ஆன்மிக சொற்பொழிவுகளும், கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், நாள்தோறும்  வேதபாராயணங்கள், தேவார திவ்ய பிரபந்தங்கள், திருமுறைகள், லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்கரநாமம், காவிரிக்கு மகா ஆரத்தி ஆகியன நடைபெற உள்ளன. உலக நன்மைக்காக வேண்டி அனைத்துவகை யாகங்களும் நடத்தப்பட உள்ளன.

இவ்விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பக்தர்களின் அத்தியாவசியத் தேவைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விழா நடைபெறும் நாள்களில் பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.Trending Articles

Sponsored