ஞான தீபம் ஒளிர பிள்ளைகளோடு கொண்டாடினோம் பிள்ளையாரை!Sponsoredசக்தி விகடனும்  தீபம் விளக்கேற்றும் எண்ணெய் உற்பத்தி நிறுவனமான காளீஸ்வரி ரீஃபைனரியும் இணைந்து வழங்கிய `ஆனைமுகனுக்கு ஞானத் தீபத் திருவிழா’, சென்னை, கோவை, மதுரை மூன்று ஊர்களிலும் கடந்த ஞாயிறன்று (27.8.17) நடந்தது.  

இறையோடு இயற்கையையும் கொண்டாடும் விதமாக இயற்கைப் பிள்ளையார் துவங்கி பல்வேறு சிறப்புப் பரிசுப் போட்டிகளோடு...

Sponsored


சென்னை- தி.நகர், ராமகிருஷ்ணா மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,

Sponsored


கோவை-சிங்காநல்லூர் ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா, 

மற்றும் மதுரை-அவுனியாபுரம் எஸ்.பி.ஜே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய மூன்று இடங்களிலும் பெரும் திருவிழாவாகவே நடந்தேறியது பிள்ளையார் கொண்டாட்டம்!

விழா நடைபெற்ற மூன்று இடங்களிலும் சிறப்பு விருந்தினர் களோடு பிள்ளைகளும் சேர்ந்து மேடையேறி, ஞான தீபத்தை ஏற்றி கொண்டாட்டத்தைத் துவக்கிவைத்தார்கள். 

தானிய பிள்ளையார், மண் பிள்ளையார், மாவுப் பிள்ளையார், காய்கறி விநாயகர்... என பிள்ளைகளின் ‘இயற்கைப் பிள்ளையார்’ படைப்புகளாகட்டும், கர்மசிரத்தையோடு  அவர்கள் வரைந்தளித்த ஓவியங்களாகட்டும் ஒவ்வொன்றும் அற்புதம். தெய்வங்களாகவும் தேவதைகளாகவும் ஆடை அலங்காரத்தில் அவர்கள் அணிவகுத்த போது, ஞான தீபத்தில் தேவலோகமாக ஜொலித்தது விழா மேடை. மழலைக் குரலிலும் மந்திர முழக்கமாகவும் தெய்வப் பாடல்களையும் ஸ்லோகங்களையும் பாடியதோடு, கதைகளையும் சொல்லி அசத்தினார்கள் சுட்டிகள். 

பிள்ளைகளுக்கு மட்டுமின்றி பெற்றோருக்கும் `தீபம் சிறப்பு’ போட் டியை அறிவித்தபோது, ஆரவார வரவேற்பு அவர்கள் மத்தியில்! 

ஒவ்வோர் ஊரிலும் மாணவியர் பங்களிப்போடு அரங்கேறிய பரதநாட்டியம் விழாவின் ஹைலைட். 

ஒவ்வொரு போட்டியிலும் தனித்துவத்துடன் வென்ற  மாணவர் களுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டன. போட்டியில் வென்றவர்களுக்கு மட்டுமின்றி, விழாவில் கலந்துகொண்ட பிள்ளைகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிறைவில், ஆசையோடும் ஆர்வத்துடனும் பரிசு களை அள்ளிச்சென்ற பிள்ளைகள் ஒவ்வொருவரின் முகத்திலும் தவழ்ந்த மகிழ்ச்சியே, விழாவின் சிறப்புக்கு சாட்சி!

சென்னையில்...

சென்னை தி.நகர்- ராமகிருஷ்ணாமிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு காலை 9 மணி முதலாகவே பெற்றோரும் பிள்ளைகளும் வரத் துவங்கினார்கள். 10 மணியளவில்,  சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சிரிப்பானந்தாவுடன் குழந்தைகளும் மேடையேறி, திருவிளக்கின் ஐந்து முகங்களிலும் ஞான தீபம் ஏற்றிவைக்க அற்புதமாய் துவங்கியது ஞான தீபத் திருவிழா.

‘‘ஞானத்தின் வெளிப்பாடு ஒளி. பிள்ளையார் ஞான சொரூபமான வர். எனில், அவரை தீபத்தால் கொண்டாடுவதுதானே சிறப்பாக இருக்கும். ஆகவே ஆனைமுகனுக்கு தினமும் தீபமேற்றி வழிபடுங்கள். இயன்றால் அந்த தீபவொளியின் அருகிலிருந்தே படிக்கவும் செய் யுங்கள். அப்போது உங்கள் ஞானம் பெருகும்” எனும் அறிவுறுத் தலோடு துவங்கிய சிறப்பு விருந்தினர் சிரிப்பானந்தா, தொடர்ந்து தீபத்தின் மகிமையையும் விளக்கினார்:

‘‘திருவிளக்கின் ஐந்துமுகங்களிலும் தீபமேற்றுவது மிகவும்  விசேஷமானது. அந்த ஐந்து முகங்களும் முறையே அன்பு, மனோ திடம், நிதானம், சமயோசிதபுத்தி, சகிப்புத் தன்மை ஆகிய ஐந்தை யும் அளிக்கும். இந்த ஐந்தும் வாய்த்துவிட்டால், உலகில் நமக்கு எல்லாமும் வசப்படும். அதேபோல் ஐந்து எண்ணெய்களைக் கலந்து விளக்கேற்றவேண்டும் என்று வழிகாட்டியிருக்கிறார்கள் நம் பெரியவர்கள். அவை என்னென்ன தெரியுமா?

தீய சக்திகள் விலக நல்லெண்ணெய்யும், உறவுகள் மேம்பட ஆமணக்கு எண்ணெய்யும், மன நிம்மதிக்கு தேங்காய் எண்ணெய்யும், செல்வங்கள் பெருக இலுப்பை எண்ணெய்யும் சேர்த்து, ஐந்தாவதாக... வீட்டில் அன்னலட்சுமியின் கடாட்சம் பெருகிட உமியிலிருந்து கிடைக்கும் எண்ணெயையும் கலந்து விளக்கேற்ற வேண்டும். இதனால் சகல சுபிட்சங்களும் பெருகும்!’’ என்றார். தொடர்ந்து குட்டிக் கதைகளோடும் தீபம் குறித்த விளக்கங்களோடும் எழுத்தாளர் சுபா கண்ணன் வெகு சிறப்பாக தொகுத்து வழங்க, பிள்ளைகளுக்கான போட்டிகள் துவங்கின.  குன்றத்தூர் நேஷனல் ஐடி இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியைச் சார்ந்த மாணவிகளின் அசத்தலான பரத நாட்டியம் எல்லோரது பாராட்டையும் பெற்றது. 

விழாவின் நிறைவில்  விழா ஒருங்கிணைப்பாளர்களிடம் வந்த மூதாட்டி ஒருவர், ''எல்லாமே ரொம்ப அற்புதம்'' என்று மனதாரப் பாராட்டியதோடு,

தேங்காய், வெற்றிலை பாக்கை அளித்து,  ''நல்லா சுத்திப் போடுங்க. எங்க கண்ணே பட்டுடும்போல'' என்று கூறிச் செல்ல, அவரது அன்பிலும் அக்கறையிலும் அனைவரும் நெகிழ்ந்துபோனார்கள்! 

மதுரையில்..

ஞானதீப திருவிழா மதுரை அவுனியாபுரம் எஸ்.பி.ஜே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. ‘யதுரா நடனக்குழு’வினரின் பரதநாட்டியத்தோடு தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். சிறப்பு விருந்தினராக  பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பங்கேற்று மாணவர்களை உற்சாகப்படுத்தினார். அவர் பேசுகையில்  “போரிடும் ஆயுதத்தையே காவியம் எழுதும் எழுத்தாணியாகப் பயன்படுத்தியவர் விநாயகர், கல்விக்கடவுள் மட்டுமல்ல, அவர் கணினிக்கடவுளும் ஆவார்.  அவரைப்பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். விளக்கேற்றும் பண்பாடு பற்றியும் அதன் காரணத்தையும் அறிந்து கொள்ள வேண்டும், மற்ற மொழி களை கற்றிருந்தாலும், அதெல்லாம் வீட்டிற்கு ஜன்னல் போல, தாய்மொழியான தமிழ்தான் தலைவாசலாகும், அதனால், தமிழை நன்கு கற்றுக்கொள்ள வேண்டும். பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கு பெற்றோர்கள் கோபப்படாமல் பதில் சொல்ல வேண்டும், அப்போதுதான் அவர்களுக்கு நம் பண்பாடு தெரியும்’’ என்று தீபமேற்றுதலின் மகிமைகளோடு, பல சுவராசியமான கதைகளை பேசி மாணவர்களையும், பெற்றோரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார். இயற்கையோடு இயைந்து வாழ் - என்ற தலைப்பில் மாணவர்கள் உருவாக்கிய இயற்கை பிள்ளையார் சிலைகள் எல்லோரது கவனத்தையும் ஈற்றது.

 கதை சொல்லுதல், ஓவியம் வரைதல், ஸ்லோகம் ஒப்புவித்தல், பாட்டுப்போட்டி மற்றும் புதிர் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு 

தீபம் விளக்கேற்றும் எண்ணெய் உற்பத்தி நிறுவனமான காளீஸ்வரி ரீஃபைனரி  சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

கோவையில்..

சிங்காநல்லூர் ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற ஞான தீபத் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பள்ளிக் குழந்தைகள் குதூகலத்துடன் போட்டிகளில் கலந்துகொண்டு அசத்தினார்கள். முன்னதாக தீபவொளியைப் போற்றும் பிரார்த்தனைப் பாடலோடு தொடங்கியது விழா. அதன் பின்னர்  பள்ளியின் தலைமை ஆசிரியை  ராதா, அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், மிக அருமையாக தீபத்தின் மகிமைகளை ஐந்து வகை எண்ணெய்களைக் கொண்டு தீபமேற்றி வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து,

சிறப்பு விருந்தினர்  கவிஞர் மகுடேசுவரனும் தீப மகிமையையும், ஒளியின் சிறப்பையும் எடுத்துக்கூறி  விழா சிறப்புரை ஆற்றினார்:

‘கண் திறந்து இருக்கும்போது தான் நம்மால் ஒளியையும், இருளையும் உணர முடிகிறது, ஆனால் கண்ணை மூடினால் நம்மால் ஒளியை மட்டுமே உணர முடியும். அதாவது புற நிகழ்வுகளை ஒதுக்கி விட்டு ஆழந்த தியானத்தில் நாம் ஒளியை மட்டுமே உணர முடியும்' என்றவர், புறத்திலும் பேரொளியின் மகத்துவத்தை அனுபவிக்க வேண்டும் என்பதன் அடையாளமாகவே தீபவொளி திகழ்கிறது என்ற அறிவுறுத்தலுடன், தீபங்களை ஏற்றும் நேரம், பஞ்ச எண்ணெய்கள் தரும் பலன்கள் ஆகியவை குறித்தும் விவரித்தார். மேலும், `ஒளிமிக்க வாழ்வே எல்லா உன்னதங்களையும் அளிக்கும் எனவே மனதிலும் ஒளி சிறக்க, ஞான தீபம் ஏற்றுங்கள்' என்றும்  மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தினார்.

இந்த விழாவுக்கு வந்திருந்த குழந்தைகளில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இயற்கைப்பிள்ளையார் செய்து கொண்டு வந்திருந்தார்கள். 

களிமண், இலைகள், மாவு, தானியங்கள் போன்றவற்றால் அவர்கள் உருவாக்கிக் கொண்டிந்த பிள்ளையார்கள் ஒவ்வொருவரும் கொள்ளை அழகு!

அவற்றில்  சிறப்பான பிள்ளையார்களை செய்தளித்த குழந்தைகள் நால்வருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து  `கதை கேளுங்கள் பதில் சொல்லுங்கள்' புதிர்ப் போட்டி,

ஓவியம் வரைதல், ஆடை அலங்கார போட்டிகள், சுலோகம்/பாட்டு சொல்லும் போட்டிகள்  ஆகியனவும் சிறப்புற நடைபெற்றன விழாவை தொகுத்து வழங்கிய  தர்ஷினி,

ஜோதியின் மகிமையை விளக்கிக் கூறிய கதைகளும் தகவல்களும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன. விழா நிறைவில் பெற்றோர்களில் சிலர்,சக்தி விகடனுக்கும்,  தீபம் விளக்கேற்றும் எண்ணெய் உற்பத்தி நிறுவனமான காளீஸ்வரி ரீஃபைனரிக்கும் தங்களது நன்றியைக் கூறிக்கொண்டதோடு, ''இப்படியொரு  கொண்டாட்டம் உங்களால் மட்டுமே சாத்தியமாகும்'' என்று பாராட்டும் தெரிவிக்க, அதுவே தங்கள் அனைவரது கருத்தும் என்று ஆமோதிக்கும்படியாக ஒட்டுமொத்த கூட்டமும் மிக மகிழ்ச்சியுடன் கரகோஷம் எழுப்பினார்கள். Trending Articles

Sponsored