"இந்த மூன்று குணங்கள்தான் ஞானம்!"- போதி தர்மரின் விளக்கம்காஞ்சிபுரம் பெரிதும் கவனம் பெறாத வரலாற்று நகரமாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம், 'சைவ காஞ்சி', 'வைணவ காஞ்சி', 'சமண காஞ்சி', 'பௌத்த காஞ்சி' என நான்கு மதங்களின் அடையாளங்களும்  ஒருங்கே  அமையப்பெற்ற பூமி. பௌத்த காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு பல்லவ மன்னன் கந்தவர்மன் ஆண்டு வந்த நேரம். இவரது காலம் 5 -ம் நூற்றாண்டாக இருக்கலாம்.  இவரது மூன்றாவது மகன்தான் போதிதாரா. 

போதி தாரா இளமையிலேயே அரச குல வழக்கப்படி குதிரை ஏற்றம், யானை ஏற்றம், போர்க்கலை, மருத்துவம் என சகலமும் கற்றுத்தேர்ந்தார். இவர் இளவரசராக இருந்தபோதே புத்தரின் போதனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். இதனால் அரச பட்டத்தைத் துறந்து, துறவறம் மேற்கொண்டார். 

Sponsored


Sponsoredமன்னர் கந்தவர்மனின் கண்களில் கண்ணீர்... தனது செல்லமகன் இப்படி  ஒரு துயர முடிவை எடுத்துவிட்டானே என்ற ஆதங்கம். 
''நீ அரண்மனையில் வாழ வேண்டியவன் துறவியாகப்போகிறேன் என்கிறாயே. நீ ஏன் இந்தச் சிறுவயதில் மரணத்தை நோக்குகிறாய்".
"அரண்மனையில் இருந்தால் மட்டும் மரணத்தைத் தடுக்க முடியுமா? மரணத்துக்கு அப்பால் உள்ள உண்மையை அறியப் போகிறேன். என்னைத் தடுக்காதீர்கள்"

Sponsored


தந்தை சிறிது நேரம் யோசித்தார்.'' நீ இந்த பல்லவ சாம்ராஜ்யத்தின் வாரிசு. ஆனால், இந்த பல்லவ சாம்ராஜ்யத்தை விட  அதிஉன்னதமான ஒன்றைத் தேர்வுசெய்து விட்டாய். உன்கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. என்னால் பதில் காணவும் முடியாது.  மரணத்துக்கு அப்பால் உள்ள உண்மை எனக்குத் தெரியாது. ஆனால், அதை நீ அறிந்து கொள்ள ஆசீர்வதித்து  விடை தருகிறேன்" எனக்கூறி அனுப்பி வைத்தார்.
போதிதர்மரும் மரணம் என்றால் என்ன? மரணத்தைக் கடப்பது எப்படி? மரணத்துக்கப்பால் உள்ளது என்ன? நான் யார்? நான் எங்கிருந்து வருகிறேன்? என் இருப்பு என்ன? என்னை அறிவது எப்படி? என்ற அவரது சந்தேகங்களை புத்த பீடத்தின் 27 வது பிரதான குருவான பெண்ஞானி பிரஜனதாரா தீர்த்து வைத்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், பெண் அடிமைத்தனம் வேருன்றிக் கிடந்த நாட்களில் புத்த பீடத்தின் பிரதான குருவாக பிரஜனதாரா இருந்தார். அவரே போதிதாராவை போதிதர்மராக்கினார். இதற்கு 'சுய விழிப்பு உணர்வு' என்று பொருள்.  போதிதர்மர் புத்த பீடத்தின் 28 - வது குருவானார். 

பிரஜனதாராதான் இவரை சீனாவுக்குச் சென்று அங்குள்ள மக்களுக்குப் பணியாற்றும்படி கூறினார். சீனாவில் கால் பதித்து ஞானம் அடைந்த முதல் ஞானி போதிதர்மர்தான். 

போதிதர்மரின் முன்னிலையில் மக்கள் அமைதியாகிவிடுவார்கள். அவருடைய குரல், சிங்கம் கர்ஜிப்பதைப் போலானது. அவருடைய பேச்சு நீர்வீழ்ச்சி போன்றது. தான் என்ன சொல்ல வேண்டுமோ அதைப் பயமின்றிச் சொல்லிவிடுவார். தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் அறவே இல்லாதவர், அதைப் பற்றிய அக்கறையும் கொள்ளாதவர். அவர் பேசும்போது பூரண அமைதி நிலவும். போதிதர்மர் தனிமையில் பேசுவது போல் இருக்கும், அங்கு வேறு யாரும் இருப்பது போல் தோன்றாது.  இது போதி தர்மருடைய வித்தியாசமான குணம்.

சீனாவில்  இருக்கும் ஷாவ்லின்  குகையில், சுவரைப் பார்த்துக்கொண்டேயிருப்பார். அங்கு செல்பவர்கள் அவருக்குப் பின்னால் உட்கார்ந்திருப்பார்கள், அவர்கள் கேள்விகள் கேட்பார்கள். ஆனால், அவர் சுவரைப் பார்த்துத்தான் பதில் சொல்லிக் கொண்டிருப்பார். யார்

அங்கு வருகிறார்கள், போகிறார்கள் என்பது போதிதர்மருக்குத் தெரியாது. 

சுவருடன்தான் பேசிக்கொண்டேயிருப்பார் போதிதர்மர். தன் உள்மன பார்வையில் மாத்திரம் அக்கறை கொண்டிருப்பார்.

அவர் தனது அகன்று விரிந்த கண்களால் ஒருவரை உற்றுநோக்கினால் அந்தப் பார்வையைப் பெற்றவர்கள் தங்களுக்குள் ‘உள்மாற்றம்‘ நிகழ்வதை உணர்ந்தனர்.

புத்தபீடத்தின் குரு மார்களின் வரிசையில் போதிதர்மர், 28வது குரு, இவருக்கு முன்பும் பின்பும் இருந்தவர்கள் யாரும் தெரியாமலேயே போய்விட்டார்கள்.

1. காசியப்பா  2. அனந்தா 3. சனவசா 4. உபகுப்தா  5.தார்தகா  6. மிக்ககா  7. வசுமித்ரா  8. புதாநந்தி  9. புதாமித்ரா 10. பார்ஸ்வா 11. புண்ணியாஸ்  12. அனபோதி  13. கபிமலா  14. நாகர்யுனா  15. கனதேவா 16. குருலத்தா 17. சங்காநந்தி  18. சங்கயாசஸ் 19. குமாரத்தா  20. சயத்தா 21. வாசுபந்து  22. மனோறித்தா 23. ஹக்லிநாஜாஸ்  24. சிம்கபோதி 25. வாசி அசிற்றா  26. புண்ணியமித்ரா 27. பிரஜ்னதரா 28. போதிதர்மர்   29. ஹியூகோ  30. செங்சான் 
ஜென் பௌத்தத்தின் ஸ்தாபகர் மகாகாசியப்பா. ஆனால் அவரைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவர் இருந்து மறைந்துவிட்டார். 

ஆனால், கடின உழைப்பும், விடாமுயற்சியும், சோம்பல் அற்று சுறுசுறுப்பான உடல் செயற்பாடும்தான் ஞானம் என்றார் போதிதர்மர். இதைப் பின்பற்றியதால்தான் சென்பௌத்த மதம் பரவியுள்ள சீனா, கொரியா, ஜப்பான் போன்ற நாடுகள் தொழில் வளம் மிக்க நாடாக இன்றளவும் உலக அளவில் உயர்ந்து நிற்கின்றன. அந்த ஞானத்தை அந்த நாட்டு மக்கள் முழுமையாக நம்புகிறார்கள். முயற்சியும், உழைப்பும் இயல்பாக மாறிவிட்டது.  இத்தனை சாதனைகளை நிகழ்த்திய போதும் ஒரு சாமான்யனைப் போலவே போதிதர்மர் நடந்துகொள்வார்.

அற்புதங்கள் நிகழ்த்தும் வல்லமை இருந்தும், அதைப் பயன்படுத்தாமல் இருப்பதென்பதே மிகச்சிறந்த வல்லமை' என ஞானிகள் காலந்தோறும் கூறிவருகிறார்கள்.  அதற்கு போதிதர்மரே சிறந்த உதாரணம். 


 Trending Articles

Sponsored