தினம் தினம் திருநாளே! தினப் பலன் செப்டம்பர் 12-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புடன்Sponsored
தினப் பலன்
செப்டம்பர்  - 12
'ஜோதிட ஶ்ரீ' முருகப்ரியன்

மேஷம்: சகோதரர்களால் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். அரசு காரியங்கள் அனுகூலமாகும். பிற்பகலுக்குமேல் அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.

Sponsored


பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.

Sponsored


ரிஷபம்: காலையில் வழக்கமான வேலைகளில் மட்டுமே ஈடுபடவும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. பிற்பகல்வரை  வேலைச் சுமை அதிகரிக்கும். மாலை நேரத்தில் மனதுக்கு இனிய தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

மிதுனம்: அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் நல்லபடி முடியும். தந்தையாலும் தந்தை வழி உறவினர்களாலும் நன்மைகள் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய முயற்சிகளுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

கடகம்: இன்று உற்சாகமாகவும் பரபரப்பாகவும் காணப்படுவீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். அரசாங்க வகையில் ஆகவேண்டிய காரியங்கள் அனுகூலமாகும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத உறவினர்கள் வருகை உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

சிம்மம்: இன்று வீடு, மனை சம்பந்தமான முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். சகோதர வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்கவேண்டி வரும் என்றாலும் உற்சாகமாகவே ஏற்றுக்கொள்வீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை நிகழும்.

கன்னி: பிற்பகல்வரை பணிச்சுமை அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் ஏற்படும். அலுவலகத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவம் நிகழும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும். மாலை நேரத்தில் வாழ்க்கைத்துணை வழி உறவினர்களின் வருகையும், அதனால் வீட்டில் மகிழ்ச்சியான நிலையும் உண்டாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படக் கூடும்.

துலாம்: இன்று செலவுகள் அதிகரிக்கும். அதனால் சிறிய அளவில் கடன் படவும் நேரும். அலுவலகத்தில் உங்கள் அனுபவ அறிவு பெரிதும் பாராட்டப்படும் வகையில் ஒரு சம்பவம் நடந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வியாபாரத்தில் விற்பனையை விடவும் லாபம் குறைவாகத்தான் கிடைக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்: உற்சாகமான நாள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கையும், அவர்களால் ஆதாயமும் உண்டாகும். அலுவலகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் நீங்கள் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறுசிறு சங்கடங்களுக்கு ஆளாக நேரிடும்.

தனுசு: இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். சகோதர வகையில் எதிர்பார்க்கும் ஆதரவு கிடைக்கும். நிலம், மனை வாங்கும் முயற்சி நல்லமுறையில் முடியும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் தேவையற்ற அலைச்சல் உங்களை சோர்வு அடையச் செய்யும். 

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை ஏற்படும்.

மகரம்: உற்சாகமாகக் காணப்படுவீர்கள். தாயின் உடல்நலம் சீராகும். அலுவலகத்தில் மற்றவர்களின் பணிகளையும் நீங்கள் பார்க்கவேண்டிய நிலை ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தந்தை வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பும் ஆதரவும் கிடைக்கும். சிலருக்குப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

கும்பம்: இன்று பொறுமையும் சகிப்புத் தன்மையும் மிக அவசியம். அலுவலக வேலைகளில் மிகவும் கவனத்துடன் ஈடுபடவும். அநாவசிய செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரும். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தருவார். மாலையில் பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.

மீனம்: மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அலுவலகத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். பிள்ளைகள் வழியில் பெருமைப்படக்கூடிய சம்பவம் நிகழும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்.Trending Articles

Sponsored