தினம் தினம் திருநாளே! தினப் பலன் செப்டம்பர் - 16-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புடன்Sponsoredதினப் பலன்
செப்டம்பர் - 16 - சனிக்கிழமை
'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்

மேஷம்:  உற்சாகமான நாள். உங்கள் தேவை அறிந்து மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை நிலவும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். 

Sponsored


அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

Sponsored


ரிஷபம்:   காலை வேளையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். பிற்பகல் வரை வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் மேற்கொள்ளவும். சிறிய அளவில் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். பிற்பகலுக்குமேல் தாய் வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். 

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும்.

மிதுனம்: இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக விடியும். உங்களின் அறிவார்ந்த பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். 

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடகம்: உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி  உண்டாகும். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாக பணி செய்வீர்கள். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். வழக்கில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும். 

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

சிம்மம்: காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தபடி இருக்கும். பிற்பகலுக்குமேல் உற்சாகம் பிறக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்துசேரும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படும்.

கன்னி: முற்பகல் வரை புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அன்றாடப் பணிகளை மட்டும் கூடுதல் கவனத்துடன் செய்து வரவும். பிற்பகலுக்குமேல் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். நீண்டநாள்களாக நினைத்திருந்த தெய்வ பிரார்த்தனையை இன்று நிறைவேற்றுவீர்கள். மாலையில் மனதுக்கு இனிய சம்பவங்கள் நடைபெறும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளின் சந்திப்பும் காரிய அனுகூலமும் உண்டாகும்.

துலாம்: காலைப் பொழுது இதமாக விடியும். மனதுக்கு இனிய சம்பவங்களைக் கேட்பீர்கள். அன்றாடப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவும் ஆதாயமும் உண்டாகும். ஆடம்பரப் பொருள்கள் வாங்குவீர்கள். 

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

விருச்சிகம்: இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாள். உங்களுடைய அறிவுபூர்வமான பேச்சால் மற்றவர்களுக்கு ஆறுதல் தருவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். ஒரு சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல செய்தி கிடைக்கப் பெறுவீர்கள்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

தனுசு:  இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் எல்லாமே அனுகூலமாக முடியும். உங்கள் தேவை அறிந்து நண்பர்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை நிலவும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். 

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.

மகரம்:  காலையில் அன்றாடப் பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்கு மேல் அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப்பெறுவீர்கள். மாலையில் நீண்டநாள்களாக சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம்.

கும்பம்:  இன்று உங்கள் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். அலுவலகத்தில்  சுறுசுறுப்பாகச் செயல்பட்டு அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். நண்பர்களிடம் இருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும். 

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.

மீனம்: இன்று நீங்கள் அன்றாடப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். நேரத்துக்கு சாப்பிடக்கூட  முடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். ஆனால், பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். தேவைப்படும் பணம் கடனாகக் கிடைக்கும். நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார்கள்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையாக இருக்கவும்.Trending Articles

Sponsored