தினம் தினம் திருநாளே! தினப் பலன் அக்டோபர் 3-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புடன்



Sponsored



தினப் பலன்
அக்டோபர் - 3 - செவ்வாய்க்கிழமை
'ஜோதிடஶ்ரீ'முருகப்ரியன்

மேஷம்: சகோதரர்களால் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். அரசு காரியங்கள் அனுகூலமாகும். பிற்பகலுக்குமேல் அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் சுமாராகவே கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும்.

Sponsored


அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

Sponsored


ரிஷபம்: காலையில் வழக்கமான வேலைகளில் மட்டுமே ஈடுபடவும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. பிற்பகல்வரை  பணிச்சுமை அதிகரித்தபடி இருக்கும். மாலை நேரத்தில் மனதுக்கு இனிய தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாகும்.

மிதுனம்: அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் நல்லபடி முடியும். தந்தையாலும் தந்தை வழி உறவினர்களாலும் நன்மைகள் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய முயற்சிகளுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். மாலையில் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

கடகம்: இன்று உற்சாகமாகவும் பரபரப்பாகவும் காணப்படுவீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். அரசாங்க வகையில் ஆகவேண்டிய காரியங்கள் அனுகூலமாகும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத உறவினர்கள் வருகை உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் நன்மைகள் ஏற்படக்கூடும்.

சிம்மம்: இன்று உற்சாகமான நாளாக இருக்கும்.. சகோதர வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்கவேண்டி வரும் என்றாலும் அதனால் ஆதாயமும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகவே ஏற்றுக்கொள்வீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

கன்னி: பிற்பகல்வரை மனதில் இனம் தெரியாத சஞ்சலம் இருந்தாலும் அடுத்தடுத்து வரும் வேலைகளின் காரணமாக அதை அவ்வளவாகப் பொருட்படுத்தமாட்டீர்கள். எதிர்பாராத தனலாபம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படும்.

துலாம்: இன்று செலவுகள் அதிகரிக்கும். அதனால் சிறிய அளவில் கடன் படவும் நேரும். அலுவலகத்தில் உங்கள் அனுபவ அறிவு பெரிதும் பாராட்டப்படும். வியாபாரத்தில் கூடுதல் முதலீடு செய்யவேண்டி இருக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைத்து உங்களுக்குப் பெருமை சேர்க்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

விருச்சிகம்: உற்சாகமான நாள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். தாயின் உடல்நலன் சிறிய அளவில் பாதிக்கப்பட்டு, மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் நீங்கள் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும்.

தனுசு: இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். சகோதர வகையில் எதிர்பார்க்கும் ஆதரவு கிடைக்கும். நிலம், மனை வாங்கும் முயற்சி நல்லமுறையில் முடியும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் தேவையற்ற அலைச்சல் உங்களை சோர்வு அடையச் செய்யும். திட்டமிட்டு அலைச்சலைக் குறைக்க முயற்சிக்கவும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளில் வெற்றியும் பணலாபமும் கிடைக்கும்

மகரம்: உற்சாகமாகக் காணப்படுவீர்கள். தாயின் உடல்நலம் சீராகும். அலுவலகத்தில் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்கவேண்டிய நிலை ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தந்தை வழி உறவினர்களிடையே மதிப்பும் ஆதரவும் அதிகரிக்கும். சிலருக்குப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் அதிர்ஷ்டயோகம் உண்டாகும்.

கும்பம்: இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படுகிறது. உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

மீனம்: காலையில் இருந்தே பரபரப்பாகக் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் அதிகரிக்கும் பணிச் சுமையின் காரணமாக நேரத்துக்குச் சாப்பிடமுடியாது. வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். வாழ்க்கைத் துணை வழியில் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவும் நேரும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் செலவுகள் அதிகரிக்கும்.



Trending Articles

Sponsored