தினம் தினம் திருநாளே! - தினப் பலன்- அக்டோபர் 4 - பஞ்சாங்கக் குறிப்புகளுடன்Sponsoredதினப் பலன்
4.10.17 - புதன்கிழமை
'ஜோதிடரத்னா' முருகப்ரியன்


 

மேஷம்:  காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். 

Sponsored


அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் நன்மை ஏற்படும்.

Sponsored


ரிஷபம்:  மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பணியின் காரணமாக சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். எதிர்பாராத பொருள் வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். 

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் நன்மைகள் ஏற்படும்.

மிதுனம்:  முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். ஒரு சிலருக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் கிடைக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

கடகம்:  இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. ஆனாலும், புது முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். 

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்:  காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர், நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். 

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

கன்னி: மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. மாலையில் குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வேண்டுதலை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.

துலாம்:  புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். அலுவலகப் பணியின் காரணமாக சிலருக்கு வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணிகளில் கவனமாக இருப்பது அவசியம்.

விருச்சிகம்:  இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. 

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

தனுசு:  காரியங்களில் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் ஆதாயமும் ஏற்படும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் மேற்கொள்ளவும். புதிய ஆடை ஆபரணங்கள் சேரும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும்.

மகரம்:  மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு மகான்களை தரிசித்து அவர்களின் ஆசிகளைப் பெறும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் பணிகளில் மிகவும் கவனமாக இருக்கவும்.

கும்பம்:  இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும்.  பணப் பற்றாக்குறை ஏற்படும் என்பதால், மற்றவர்களிடம் சிறிய அளவில் கடன் வாங்க நேரும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டு.

மீனம்:  இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். ஆனாலும், வீண் செலவுகள் அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். சிலருக்கு குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.Trending Articles

Sponsored