தினம் தினம் திருநாளே! தினப் பலன் அக்டோபர் - 5-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புகளுடன்



Sponsored




தினப் பலன்
அக்டோபர் - 5- வியாழக்கிழமை
'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்

மேஷம்:  பணவரவு மகிழ்ச்சி தரும். புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். 

Sponsored


பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்பு உண்டு.

Sponsored


ரிஷபம்: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். முயற்சிகளில் வெற்றியும் பணலாபமும் கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். அலுவலகப் பணியின் காரணமாக சிலருக்கு தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ள நேரும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

மிதுனம்: அதிகாரிகளால் ஆதாயம் ஏற்படும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி தேடி வரும். சுபநிகழ்ச்சிகள் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.

கடகம்: வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் மேற்கொள்வது சாதகமாக முடியும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். 

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

சிம்மம்: எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். காரியங்களில் தடை தாமதம் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் ஏற்படும். சிலருக்கு புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கன்னி:  மனம் உற்சாகமாகக் காணப்படும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

துலாம்: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புண்டு. உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

விருச்சிகம்: உற்சாகமான நாளாக அமையும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சிலருக்கு அலுவலகப் பணிகளின் காரணமாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தொலைந்த பொருள் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.

தனுசு: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச்  சாதகமாக முடியும். இன்று பிற்பகலுக்குள் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் கிடைக்கும்.

மகரம்:  இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வெளியூரில் இருந்து எதிர்பார்த்த  நல்ல செய்தி வரும்.  

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசு வகையில் அனுகூலம் ஏற்படக்கூடும்.

கும்பம்: உற்சாகமான நாளாக அமையும். சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அரசாங்க விஷயங்களில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

மீனம்:  புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். கூடுமானவரை பயணங்களைத் தவிர்க்கவும். மாலையில் உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.


 



Trending Articles

Sponsored