ஆண் தன்னைவிட ஓரிரண்டு வயது மூத்த பெண்ணை மணக்கலாமா- ஜோதிடம் என்ன சொல்கிறது? #AstrologySponsored'திருமணம் பண்ணிப்பார், வீட்டைக்கட்டிப் பார்' என்பார்கள். இரண்டுமே அவ்வளவு சிரமமான செயல்கள். பெண் பார்த்து, பொருத்தம் பார்த்து, பேசிமுடித்து கழுத்தில் தாலி ஏறுவதற்குள் போதும், போதுமென்றாகி விடும். திருமணப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்யும்போது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அனுபவங்கள் ஏற்படும். சிலவேளைகளில் ஜாதகம் பொருந்தி வரும். ஆனால், பெண்ணுக்கு மாப்பிள்ளையைவிட இரண்டொரு வயது கூடுதலாக இருக்கும். இந்தச் சூழலில் என்ன முடிவு எடுப்பது?  தன்னைவிட இரண்டொரு வயது மூத்த பெண்ணை மணக்கலாமா? ஜோதிட முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

''இது அவரவர் ஜாதகத்தில் இருக்கக்கூடிய அம்சங்களைப் பொறுத்தது.ஜோதிட ரீதியாகப் பார்த்தோம் என்றால், சந்திரன், புதன் மற்றும் சுக்கிரன் யவனத்துக்கு உரிய கிரகங்கள். குறிப்பாக இளமை, அழகு, வனப்பு ஆகியவற்றுக்கு உரிய கிரகங்கள். 

Sponsored


ஜாதகக் கட்டத்தில் சந்திரன் நிற்கும் இடத்தை ராசி என்று சொல்வார்கள். சந்திரன்தான் ஒருவருடைய உடல் அமைப்பை அழகை தீர்மானிக்கக் கூடிய கிரகம். இளமையைக் குறிக்கக்கூடிய கிரகம். புதன் ஒருவருடைய ஜாதகத்தில் ஆட்சியாகவோ உச்சம் பெற்றோ இருந்தால், தேஜஸ்ஸாக இருப்பார். சுக்கிரன், ஒருவருடைய ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று இருந்தால், அவர் கூட்டத்தில் தனித்துக் காணப்படுபவராக இருப்பார். நல்ல ஆளுமைப் பண்புமிக்கவராக இருப்பார். 

Sponsored


ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும், லக்னத்திலிருந்து 7-ம் இடம், 8-ம் இடம், அவர்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணையைப் பற்றி குறிக்கும்.

 திருமணத்துக்குப் பெண் பார்க்கும்போது ஆண்களின் ஜாதகத்தில் ஏழாமிடத்தில், எட்டாமிடத்தில் சனி பகவான் இருந்தால், தன்னைவிட வயதான பெண்ணை மணக்க வேண்டி வரும். அதுதான் சாஸ்திர விதி. சனிபகவான் முதுமை, மூப்பு இவற்றுக்குக் காரணகர்த்தாவாக இருப்பதுதான் இதற்குக் காரணம். 

7-ம் இடத்துக்கு உரிய கிரகம் சூரியனாகவோ, செவ்வாயாகவோ இருந்து, சனியின் பார்வை பட்டால், அல்லது இவர்களை 7-ம் இடத்து சனிபகவான் பார்த்தாலும், தன்னைவிட வயது அதிகமுள்ள பெண்ணைத்தான் மணக்க வேண்டி வரும்.

ஆனால், இதை நிறைய பெற்றோர் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். 'அது எப்படிங்க? பையனைவிட வயது குறைவாக உள்ள பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணணும். அப்போதுதானே பையனுக்கு வாழ்க்கை நல்லவிதமா அமையும்' என்று வாதிடுவார்கள். ஆனால், அந்தப் பையனோட ஜாதகத்தை எடுத்துப் பார்த்தோம்னா அவங்க ஜாதகத்துல சனிபகவான் ஏழாமிடத்தைப் பார்ப்பவராகவோ ஏழாமிடத்தில் இருப்பவராகவோ இருப்பார். இவர்களுக்கு வயது மூத்த பெண்தான் அமையும்.

இந்த ஜோதிட விதியை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். அதை விட்டுட்டு 'அந்தப்பொண்ணுக்கு வயசு ஜாஸ்தி. அதனால அந்தப் பொண்ணை வேணாம்னு சொல்லிட்டோம்'னு சொல்லக் கூடாது. எல்லோருக்கும் இது மாதிரி அமைப்பு இருக்காது. விதிவிலக்காக சிலருக்கு இருக்கும். எல்லா விதிகளுக்கும் விதிவிலக்கு உண்டல்லவா? மணப்பெண் மாப்பிள்ளையைவிட இரண்டொருவயது கூடுதலாக உள்ளவரென்றால் தவறில்லை. அதைவிட அதிகமான வயது என்றால் வேறு இடம்பார்க்கலாம்.

சனிபகவான் ஏழாமிடம் எட்டாமிடம் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு மட்டும்தான் இப்படி வயது மூப்புள்ள பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டியது வரும். அதனால், இது ஒன்றும் தவறு அல்ல. ஜாதகம் பொருந்தி வந்தால், பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பிடித்திருந்தால், தாராளமாகத் திருமணம் செய்யலாம். எந்தச் சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை" என்று கூறினார்.Trending Articles

Sponsored