தினம் தினம் திருநாளே! தினப் பலன் அக்டோபர் 24-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புடன்Sponsoredதினப் பலன்
அக்டோபர் - 24 - செவ்வாய்க்கிழமை
'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்

மேஷம்:

Sponsored


உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும். அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். தாய் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

Sponsored


அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும்.

ரிஷபம்:

மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

மிதுனம்:

இன்று நீங்கள் பரபரப்பாகச் செயல்படுவீர்கள். ஆனாலும், அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. நீண்டநாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று கிடைக்கக்கூடும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படக்கூடும்.

கடகம்:

இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். 

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய காரியங்களில் ஈடுபட வேண்டாம்.

சிம்மம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். 

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும்.

கன்னி:

மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.குடும்பப் பெரியவர்களின் அன்பும் ஆசிகளும் கிடைக்கும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

துலாம்:

முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். மாலையில் நீண்ட காலமாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அவர்களால் சில ஆதாயங்களும் ஏற்படக்கூடும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்:

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அரசு அதிகாரகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. புது முயற்சிகள் வேண்டாம். 

கேட்டை  நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத வாகன யோகம் உண்டாகும்.

தனுசு:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டில் இருந்து வரும் செய்தி மகிழ்ச்சி தரும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.  சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். 

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக்கூடும்.

மகரம்:

மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பணியின் காரணமாக சிலர் வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் வீண் செலவுகள் உண்டாகும். 

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறு சிறு தடைகள் ஏற்படக்கூடும்.

கும்பம்:

இன்று உற்சாகமான நாளாக இருக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் ஏற்பாடாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.

மீனம்:

இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். தெய்விகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். 

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டு.Trending Articles

Sponsored