துலாம் ராசிக்காரர்களுக்கு தொடங்குகிறது நல்ல நேரம் - கார்த்திகை மாத ராசிபலன் தனுசு முதல் மீனம் வரை நான்கு ராசிகளுக்குமான ராசிபலன்



கார்த்திகை மாத ராசிபலன்
நவம்பர் 17 முதல் டிசம்பர் 15 வரை
'ஜோதிட மாமணி' கிருஷ்ணதுளசி

Sponsored


தனுசு:

Sponsored


12-ல் சூரியன், புதன், சனி; 10,11-ல் செவ்வாய்; 11-ல் குரு; 11,12-ல் சுக்கிரன்; 2-ல் ராகு; 8-ல் கேது

Sponsored


தனுசு ராசி அன்பர்களே!

ராசி அதிபதி குருபகவான் லாபவீட்டில் இருப்பதால் பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் பெருமைப்படத்தக்க செய்திகளைக் கேட்பீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.

மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஆனால், சூரியன், சனி, புதன் மற்றும் சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால், குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் உறவினர்களால் குடும் பத்தில் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்ப விஷயங்களில் அவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால்,கவனமாகச் செல்வதன் மூலம் விபத்துகளைத் தவிர்க்கலாம்.

அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு பதவி மாற்றமும், இட மாற்றமும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சக ஊழியர்களிடமும் போதுமான ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. மாதப் பிற்பகுதியில் ஓரளவு அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விடவும் குறைவாகவே கிடைக்கும். மறைமுக எதிரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இந்த மாதம் வேண்டாம். மாதப் பிற்பகுதியில் ஓரளவுக்கு நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத் தாகும். நியாயமாக உங்களுக்குக் கிடைக்கவேண்டிய பாராட்டுகள் மறுக்கப்படும். மாதப் பிற்பகுதியில் நிலைமை சீராகும். புகழும் கௌரவமும் ஒருபடி உயரும். பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும்.

மாணவ - மாணவியர்க்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. கஷ்டப்பட்டு படித்தால்தான், பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற முடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும்.உறவி னர்களுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு தருவார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சாதகமான நாள்கள்: நவம்பர் 18,21,22,23,27; டிசம்பர் 3,4,5,6,11,12,14,15
சந்திராஷ்டம நாள்கள்: டிசம்பர் 7,8 
அதிர்ஷ்ட எண்கள்: 2,3,7

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி, விநாயகர்

பரிகாரம்: விநாயகருக்கு வெள்ளிக்கிழமைகளில் தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றி, அறுகம்புல்லால் அர்ச்சனை செய்வது நல்லது. மேலும் வியாழக்கிழமைகளில் தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் மலர் கொண்டு அர்ச்சித்து வழிபடுவதும் நன்மை தரும்.

மகரம்:

11-ல் சூரியன், புதன், சனி; 9,10-ல் செவ்வாய்; 10-ல் குரு; 10,11-ல் சுக்கிரன்; 1-ல் ராகு; 7-ல் கேது

மகர ராசி அன்பர்களே!

மாதம் முழுவதும் சூரியன், புதன், சனி, ஆகியோருடன் மாதப் பிற்பகுதியில் சுக்கிரனும் நற்பலன் களைத் தரவிருக்கிறார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணவரவு கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். அவர்களால் மறைமுக ஆதாயமும் கிடைக்கக்கூடும்.  

உங்கள் முயற்சிகளுக்கு மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பப் பெண்கள் பக்கபலமாக இருப் பார்கள். ஆனால், மாதப் பிற்பகுதியில் விலை உயர்ந்த நகை மற்றும் பொருள்களை இரவல் தரவும் வாங்கவும் வேண்டாம். வீட்டில் பொருள்கள் களவு போகக்கூடும் என்பதால், எச்சரிக்கையாக இருக்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அலுவலகத்தில் ஓரளவுக்கு முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் ஒத்துழைப்பு தருவார்கள். உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதில் இருந்த தடைகள் விலகும். 

தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த லைசென்ஸ் போன்ற விஷயங்கள் எளிதாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும். மற்ற கலைஞர்களிடம் அனுசரனையாக நடந்துகொள்வது நல்லது. உங்களைப் பற்றிய வதந்திகள் பரவினாலும், பொருட்படுத்தாமல் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

மாணவ - மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மாதத்தின் பெரும்பகுதி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கணவரிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

சாதகமான நாள்கள்: நவம்பர் 18,19,20,24,25,29,30; டிசம்பர் 5,6,7,14,15
சந்திராஷ்டம நாள்கள்: 9,10
அதிர்ஷ்ட எண்கள்: 1,2,7

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான், பைரவர்

பரிகாரம்: அஷ்டமி தினத்தில் பைரவருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும், செவ்வாய்க் கிழமைகளில் முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும் நன்மை தரும்.


கும்பம்:

10-ல் சூரியன், புதன், சனி; 8,9-ல் செவ்வாய்; 9-ல் குரு; 9,10-ல் சுக்கிரன்; 6-ல் ராகு; 12-ல் கேது

கும்ப ராசி அன்பர்களே!

சூரியன், புதன், குரு, ராகு ஆகியோர் மாதம் முழுவதும் அனுகூலமாக இருக்கின்றனர். சுக்கிரனும் மாதப் பிற்பகுதி வரை நன்மை செய்வார். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை நல்லபடியே இருக்கும். பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குடிகொள்ளும். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும்.

குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பெண்களால் நன்மை உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்விகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.  சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர்ப் பயணங்களின்போது கைப்பொருள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும்.

அலுவலகத்தில் உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்கள் ஆலோசனைகள் நிர்வாகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும். மேலதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களிடையே உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகமாகக் கிடைக்கும். சக போட்டியாளர்களின் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். ஆனாலும், வியாபாரத்தை விரிவுபடுத்தவோ அல்லது புதிய முதலீடு செய்வதையோ கண்டிப் பாகத் தவிர்க்கவும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் தேடி வரும். ஆனால், மாதப் பிற்பகுதியில் சக கலைஞர்களால் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். உங்களைப் பற்றிய வதந்திகளும் பரவக்கூடும்.

மாணவ - மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

சாதகமான நாள்கள்: நவம்பர் 19,20,21,23,27; டிசம்பர் 1,2,7,9,10
சந்திராஷ்டம நாள்கள்: 11,12,13
அதிர்ஷ்ட எண்கள்: 2,5

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான், துர்கை

பரிகாரம்: தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் ராகுகால வேளையில் துர்கைக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வது நல்லது.  

மீனம்:

9-ல் சூரியன், புதன், சனி; 7,8-ல் செவ்வாய்; 8-ல் குரு; 8,9-ல் சுக்கிரன்; 5-ல் ராகு; 11-ல் கேது

மீன ராசி அன்பர்களே!

சுக்கிரன் மற்றும் கேது ஆகியோரால் நன்மைகள் ஏற்படக்கூடும். மற்ற கிரகங்கள் அவ்வளவு அனுகூலமாக இல்லை. எனவே, எந்த ஒரு காரியமும் ஒருமுறைக்குப் பலமுறை முயற்சித்த பிறகே முடியும். எதிலும் தடை தாமதங்கள் இருக்கவே செய்யும். பொறுமை மிகவும் அவசியம். வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம். தேவையற்ற அலைச்சலும், வாழ்க்கைத்துணையால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் மனைவி மற்றும் மகளின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது. பிள்ளைகளால் தர்மசங்கடமான நிலைமைகளைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும்.

மாதப் பிற்பகுதியில் மேற்கண்ட வகைகளில் நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள். உறவினர்களால் அனுகூலம் ஏற்படும் என்றாலும், சில பிரச்னைகளும் ஏற்படக் கூடும். சகோதரிகளின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். தாய்மாமன் வகை உறவுகளால் சில தர்மசங்கடமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தடை, தாமதங்கள் ஏற்படக்கூடும். சக ஊழியர்களிடம் போதுமான ஒத்துழைப்பு கிடைக்காது. மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது எதிர்காலத்துக்கு நல்லது. 

தொழில் மற்றும் வியாபாரத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு உழைக்கிறீர்களோ அவ்வளவுக்கு லாபம் கிடைக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு கடினமாக முயற்சித்தால் மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கும்.  அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவீர்கள். படப்பிடிப்பு தொடர்பாக வெளிமாநில, வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.

மாணவ - மாணவியர்க்கு கஷ்டப்பட்டு படித்தால் மட்டுமே தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். நண்பர்களுடன் பழகுவதில் மிகவும் கவனம் தேவை.  சந்தேகங்களை அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமம் தரும் மாதமாக இருக்கும். ஆனாலும், பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

சாதகமான நாள்கள்: நவம்பர் 21,22,,23,24,29,30 டிசம்பர் 3,4,9,10,12
சந்திராஷ்டம நாள்கள்: நவம்பர் 17,18 மற்றும் டிசம்பர் 14,15
அதிர்ஷ்ட எண்கள்: 5,7,9

வழிபடவேண்டிய தெய்வம்: சூரியன், தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கு செம்பருத்திமாலை அணிவித்து அர்ச்சனை செய்வதும், ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வதும் நன்மை தரும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதும் நன்மை தரும்.



Trending Articles

Sponsored