துலாம் ராசிக்காரர்களுக்கு தொடங்குகிறது நல்ல நேரம் - கார்த்திகை மாத ராசிபலன்



கார்த்திகை மாத ராசிபலன்
நவம்பர் 17 முதல் டிசம்பர் 15 வரை
'ஜோதிட மாமணி' கிருஷ்ணதுளசி

Sponsored


மேஷம்:

Sponsored


8-ல் சூரியன், புதன், சனி; 6,7-ல் செவ்வாய்; 7-ல் குரு; 7,8-ல் சுக்கிரன்;  4-ல் ராகு; 10-ல் கேது

Sponsored


மேஷ ராசி அன்பர்களே!

சூரியன் சாதகமாக இல்லாத காரணத்தால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்கள் தாமதமானாலும் நல்லபடி முடியும். ஆனால், செவ்வாய் அனுகூலமாக இருப்பதால், எதிலும் வெற்றியே ஏற்படும். எதிரிகள் பணிந்து போவர். அவர்களால் மறைமுக ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனால், மாதப் பிற்பகுதியில் சகோதரர்களுடன் சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டு சரியாகும். மாதம் முழுவதும் புதன் சாதகமாக இருப்பதால், எடுத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குரு அனுகூலமாக இருப்பதால், திருமண முயற்சிகள் கைகூடும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதத்தின் பிற்பகுதியில் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், உறவினர்களாலும் நண்பர்களாலும் ஆதாயம் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். ஆனால், அஷ்டம ஸ்தானத்தில் சனி இருப்பதால்,  வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும் என்றாலும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மிகச் சிறப்பாகச் செய்து, அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிலருக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கும். 

தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எதிர்பார்த்ததை விடவும் பணவரவு கூடுதலாகக் கிடைக்கும். ஆனால், அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் லசென்ஸ் போன்ற விஷயங்கள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு மாத முற்பகுதியில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், மாதப் பிற்பகுதியில் வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமம் இருக்காது. சக கலைஞர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படக்கூடும். 

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் மிகச் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆனால், சக மாணவர்களிடம் கவனமாகப் பழகவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.  அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

சாதகமான நாள்கள்: நவம்பர்: 18,24,25,27; டிசம்பர்: 1,2,5,6,11,12,14,15
சந்திராஷ்டம நாள்கள்: நவம்பர் 19,20 - புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3,5,7

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான், மகாலட்சுமி

பரிகாரம்: தினமும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது. சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வதும், வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நெய்தீபம் ஏற்றுவதும் சிறந்த பலன்களைத் தரும்.

ரிஷபம்:

7-ல் சூரியன், புதன், சனி; 5,6-ல் செவ்வாய்; 6-ல் குரு; 6,7-ல் சுக்கிரன்; 3-ல் ராகு; 9-ல் கேது

ரிஷப ராசி அன்பர்களே!

மாதத்தின் பிற்பகுதியில் இருந்து செவ்வாய் சாதகமாக இருப்பதால், காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ராகு சாதகமாக இருப்பதால், முன்னேற்றத்துக்குத் தடை இருக்காது. புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆனால், பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இல்லை என்பதால், குடும்பத்தில் அடிக்கடி வீண் விவாதம், கணவன் - மனைவிக்கு இடையில் கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதத்தின் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பிள்ளைகள் வகையில் பெருமை சேரும். உறவினர்கள் வருகையும், அவர்களால் உதவிகளும் உண்டு. ஆனால், மாதக் கடைசியில் அவர்களில் சிலரால் பிரச்னைகளும் ஏற்படலாம் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். கேதுவின் சஞ்சாரம் சரியாக இல்லாததால், உடல் நலனில் கவனம் தேவை.

உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், சக ஊழியர்கள் அனுசரனையாக நடந்துகொள்வார்கள். கூடுமானவரை உங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உயர் அதிகாரிகளுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அவர் கோபத்தில் எதுவும் கூறினாலும், மௌனமாக இருப்பது பிற்காலத்துக்கு நல்லது.

தொழில், வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். போட்டிகள் அதிகரிக்கும். சக வியாபாரிகளால் மறைமுக எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டி வரும். வீண் அலைச்சலும் அதனால் மனச் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். வியாபாரத்தை முன்னிட்டு வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். புதிய முயற்சிகளை இந்த மாதத்தில் மேற்கொள்ளவேண்டாம். அரசாங்கக் காரியங்கள் தாமதமாக முடியும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை கவனமாகப் பயன் படுத்திக் கொள்வது அவசியம். மாதப் பிற்பகுதியில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். முயற்சிகளில் இருந்த தடை, தாமதங்கள் நீங்கும்.

மாணவ - மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம். கஷ்டப்பட்டு படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். சந்தேகங்களை ஆசிரியர்களிடம் உடனுக்குடன் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது. 

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகள் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதப் பிற்பகுதியில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதுக்கு உற்சாகம் தரும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் அலுவலகத்தில் தங்கள் பொறுப்புகளில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். 

சாதகமான நாள்கள்: நவம்பர்: 18,19,20,27,28,29,30 டிசம்பர்: 3,4,7,14,15
சந்திராஷ்டம நாள்கள்: நவம்பர் 21,22,23 - எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
அதிர்ஷ்ட எண்கள்:5,6

வழிபடவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வெங்கடாசலபதி

பரிகாரம்: விஷ்ணுசஹஸ்ரநாமம் மற்றும் மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாராயணம் செய்வது நல்ல பலன்களைத் தரும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.


மிதுனம்:

6-ல் சூரியன், புதன், சனி; 4,5-ல் செவ்வாய்; 5-ல் குரு; 5,6-ல் சுக்கிரன்; 2-ல் ராகு; 8-ல் கேது

மிதுன ராசி அன்பர்களே!

சூரியன், புதன், சனி மற்றும் குரு ஆகியோர் சாதகமாக இருப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். கணவன் - மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் உறவினர்கள் வகையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட சாத்தியம் உள்ளதால், பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. மாதத்தின் பிற்பகுதியில் எதிரிகளால் பிரச்னைகளும், கடன் தொல்லைகளும் ஏற்படக்கூடும். ஆனாலும், குரு பலம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின்படி நடந்துகொண்டு, அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். பணிகளில் அவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் உங்களை உற்சாகப்படுத்தும். அலுவலகத்தில் உங்களுடைய எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த மாதம் ஈடுபடலாம். 

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் கதவைத் தட்டும். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும். படைப்புகள் பெரும் வரவேற்பு பெறும். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கௌரவிக்கப்படுவீர்கள். படப்பிடிப்பு தொடர்பாக சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

மாணவ மாணவியர்க்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகள் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். 

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். தோழியர்கள் வட்டாரத்தில் உங்கள் செயல்பாடுகள் பாராட்டப்படும். கணவரின் அன்பும் ஆதரவும் மனதுக்கு மகிழ்ச்சி தரும். பணிக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு, அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். சொந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்மணிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும்.

சாதகமான நாள்கள்: நவம்பர் 19,20,21,23,29,30  டிசம்பர் 2,5,6,9,10
சந்திராஷ்டம நாள்கள்: நவம்பர் 24,25 - புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட எண்கள்:1,7,9

வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை, முருகப் பெருமான்

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் கந்த சஷ்டி பாராயணம் செய்வதும், சனிக்கிழமைகளில் அனுமன் சாலீசா பாராயணம் செய்வதும் நற்பலன்களைத் தரும். 


கடகம்:

5-ல் சூரியன், புதன், சனி; 3,4-ல் செவ்வாய்; 4-ல் குரு; 4,5-ல் சுக்கிரன்; 1-ல் ராகு; 7-ல் கேது

கடக ராசி அன்பர்களே!

சுக்கிரன் சாதகமாக இருப்பதால்,  திடீர் அதிர்ஷ்ட யோகம் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். நண்பர்களும் அனுகூலமாக இருப்பார்கள். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி, சுமுகமான சூழ்நிலை உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். மாதப் பிற்பகுதியில் குடும்பப் பெரியவர்களால் நன்மைகள் நடக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். ஆண்களுக்கு பெண்களாலும் பெண்களுக்கு ஆண்களாலும் நன்மைகள் ஏற்படும். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். ஆனால், குரு 4-ல் இருப்பதால், உடல்நலனில் கவனம் தேவைப்படுகிறது. தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.அவருடைய உடல் ஆரோக்கியமும் சிறிய அளவில் பாதிக்கப்பட்டு, உடனே சரியாகிவிடும்.  தாய்வழி உறவினர்களிடம் அனுசரனையாக நடந்துகொள்ளவும்.

அலுவலகத்தில் அதிக பணிச்சுமை ஏற்படுவதால், மனதில் சோர்வும், உடல் அசதியும் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது எதிர்காலத்துக்கு நல்லது. சிலருக்கு திடீர் இடமாற்றம்,. பணிமாற்றம் ஏற்படக்கூடும். எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும்.

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை காணப்படுகிறது. ஆனாலும், மறைமுகப் பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டி இருக்கும். மாதப் பிற்பகுதியில் கொடுக்கல் - வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் சாமர்த்தியமாகப் பேசி வாய்ப்புகளைப் பெறுவார்கள்.  கலைஞர்களுக்கு  சக கலைஞர்களாலும் நன்மைகள் ஏற்பட சாத்தியம் உள்ளது.

மாணவ மாணவியர்க்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. தேவையற்ற சகவாசத்தைத் தவிர்க்கவேண்டியது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். கணவரின் அன்பும் அவர் வழி உறவினர்களால் நன்மைகளும் ஏற்படும். சிலருக்கு வெளியூர் புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

சாதகமான நாள்கள்: நவம்பர் 21,22,24,25,30; டிசம்பர் 1,2,3,7,11,12
சந்திராஷ்டம நாள்கள்: நவம்பர் 26,27
அதிர்ஷ்ட எண்கள்: 4,6

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை, மகா விஷ்ணு

பரிகாரம்: புதன்கிழமைகளில் விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும், வியாழக்கிழமை களில் தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.



Trending Articles

Sponsored