சனிப்பெயர்ச்சி... கன்னி ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017Sponsoredந்த வருடம் (2017)  டிசம்பர் மாதம் 19-ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனீஸ்வர பகவான். அவர் 26.12.2020 வரை தனுசு ராசியில் இருந்து பலன்களைத் தரவுள்ளார். இந்த மூன்று ஆண்டுகளில் கன்னி ராசிக்காரர்களுக்கு  ஏற்படக்கூடிய பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து விவரிக்கிறார்  'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரன். 

"கன்னி ராசி அன்பர்களே! சனிபகவான் உங்களுக்கு யோகாதிபதி. சனி பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியாகவும், திரிகோணாதியாகவும் இருக்கிறார். சனிபகவான் இவ்வளவு நாளாக 3-ம் இடத்தில் இருந்து ஓரளவு நல்லபலன்களைத் தந்து நிலைமைகளை சமாளிக்கும் விதமாகப் பார்த்துக்கொண்டார். இனி,  4-ம் இடமான தனுசில் இருந்து, அர்த்தாஷ்டமாதிபதியாக இனி வழி நடத்த இருக்கிறார். 

Sponsored


அஷ்டம் என்றால் எட்டு. அர்த்தாஷ்டம் என்றால் எட்டில் பாதி நான்கு. அதாவது நான்காமிடம் என்பது சுகஸ்தானத்தைக் குறிக்கும். தாயாருக்கு உரிய இடமாகும். அதனால், தாயாரின் உடல் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. 

Sponsored


நான்காமிடத்தில் சனி பகவான் இருப்பதால், அலைச்சல்  அதிகமிருக்கும். தூக்கம் குறையும்.  திடீர்ப் பயணங்கள் ஏற்படும். அதனால், நீங்கள் சாப்பிடும்  உணவுப்பொருட்களில் கவனம் கொள்வது நல்லது. நாலாமிடம் என்பது வீட்டுக்கு உரிய ஸ்தானம். அதனால் வீடு விற்பதாக இருந்தால், 'நல்ல நபரா' என்பதை ஆராய்ந்து அவர்களுக்கு விற்பனை செய்யுங்கள். இல்லாவிட்டால் இழுபறியில் முடியும் வாய்ப்பு அதிகம் உள்ளது.  முழுத்தொகையையும்   ஒரே  முறையில் வாங்குவது நல்லது. 

வீடு வாங்குவதாக இருந்தால், கன்னி ராசிக்காரர்கள் என்பதால், அப்பார்ட்மென்ட்டாக முதல்தளத்தில் வாங்குவது சிறப்பு. எந்த இடமாக இருந்தாலும், தாய்ப் பாத்திரத்தைப் பார்த்து வாங்க வேண்டும் வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்கவேண்டும். வழக்குகள் சாதகமாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். குடும்ப வருமானம் உயரும். 

கன்னி ராசிக்காரர்கள், வேலூர் மாவட்டம்,  பெரிய மணலியில் இருக்கும் நாகரத்தினசுவாமி திருக்கோயிலுக்குச்சென்று நாகேசுவரசுவாமியை வழிபட்டால், நல்ல பலன்களைப் பெறலாம். 

 (கன்னி ராசிக்காரர்கள் இந்த வீடியோ லிங்க்கில்... சனிப்பெயர்ச்சியின் விரிவான பலன்களை அறியலாம்.) 


வேலூர் மாவட்டம், வாணியம்பாடியிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது, நாகரத்தினசுவாமி திருக்கோயில். பாலாற்றின் தென்கரையில், 3 நிலை கோபுரங்களுடன் இந்தக்கோயில் அமைந்துள்ளது. 

இங்குள்ள  நாகேசுவரர் சுவாமியையும் அபயவல்லி அம்பாளையும் வழிபட்டால், வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தல புராணம்

மேய்ச்சலுக்குச் சென்ற பசுக்களில் ஒன்று, தினமும் இங்கிருந்த புற்றில் பாலைச் சுரந்துவிட்டு சென்றது. மேய்ச்சலுக்காக மாடுகளை ஓட்டி வரும் சிறுவன், இந்த செய்தியை தனது பண்ணைக்கராரிடம் சொல்ல, ஊர்மக்கள் அனைவரும் திரண்டு வந்து அந்தக்காட்சியைக் கண்டனர். அருகே சென்று பார்த்தபோது அங்கே ஒரு சிவலிங்கம் இருந்ததைக் கண்டனர். அதன்பிறகே இங்கு கோயில் நிர்மாணிக்கப்பட்டது. அதனால் மூலவர் நாகரத்தினசுவாமியாக காட்சிதருகிறார். 

தல விருட்சம்

இதன் தலவிருட்சம் வில்வம்.  திர்த்தம் நாக தீர்த்தம். இது தவிர காளஹஸ்தியில் இருக்கும் காளத்திநாதருக்கும் ஞானாம்பிகைக்கும் தனிசந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.

மேஷ ராசிக்காரர்கள் சனிப்பெயர்ச்சிப் பலன்களைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்..!

ரிஷப ராசிக்காரர்கள் சனிப்பெயர்ச்சிப் பலன்களைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்..!

மிதுன ராசிக்காரர்கள் சனிப்பெயர்ச்சிப் பலன்களைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்..!

கடக ராசிக்காரர்கள் சனிப்பெயர்ச்சிப் பலன்களைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்..!

சிம்ம ராசிக்காரர்கள் சனிப்பெயர்ச்சிப் பலன்களைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்..!

சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்களைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்..!Trending Articles

Sponsored