கிருஷ்ணகிரி ஏரியில் தெப்பம் விடும் பூஜைSponsoredகிருஷ்ணகிரி பெரிய ஏரி 12 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியதால் விவசாயிகள் இன்று காலை தெப்பம் விட்டுச் சிறப்பு பூஜை செய்தனர். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகக் கடுமையான வறட்சி ஏற்பட்டு ஏரி குளங்கள் எல்லாம் காய்ந்து வறண்டு இருந்தது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பெய்த மழையால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள், ஏரிகள் நிரம்பியது. 

Sponsored


கிருஷ்ணகிரி அருகேயுள்ள மார்கண்டையன் நதியிலிருந்து பெரிய ஏரிக்கு கடந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம் நீர் வந்தது. தொடர்ந்து நீர் வந்ததையடுத்து பெரிய ஏரி கடந்த 19-ம் தேதி நிரம்பி வழிந்தது. 

Sponsored


இதையடுத்து, பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஏரிகளுக்கு நீரைக் கொண்டுசெல்லும் வகையில் பெரிய ஏரியிலிருந்து பாசனக் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட பாசனக் கால்வாயில் உள்ள அடைப்புகளைச் சுத்தம் செய்யும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய பெரிய ஏரிக்கு போகனப்பள்ளி, பெரிய ஏரியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் சிறப்பு பூஜைகள்செய்து, ஏரியில் தெப்பம்விட்டு மகிழ்ந்தனர். தெப்பம் விடுவதன் மூலம் விவசாயம் செழிக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை, பல ஆண்டுகள் தொடர்ந்துவருகிறது.Trending Articles

Sponsored