சனிப்பெயர்ச்சி... கும்ப ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017Sponsoredஇந்த வருடம் (2017) டிசம்பர் மாதம் 19-ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார், சனீஸ்வர பகவான். அவர் 26.12.20 வரை தனுசு ராசியிலிருந்து பலன்களைத் தரவுள்ளார். இந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ராசியினருக்கும் ஏற்படக்கூடிய பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து, `ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

அதன்படி, அவர் சொன்ன கும்ப ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம் ஆகியவற்றைப் பார்ப்போம்.
கும்ப ராசி அன்பர்களே! உங்களுடைய ராசிநாதனே சனிபகவான்தான். சனிபகவான் சாத்வீகமாக இருக்கக்கூடிய ராசி உங்கள் ராசி. நீதி தேவனான சனி பகவானுடைய ராசியில் நீங்கள் பிறந்ததால்தான் நீதி, நேர்மை அதற்கு அடுத்து மனச்சாட்சி இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உங்களுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சியில் சனி பகவான் முதல் தரமான ராஜயோகத்தைத் தரக்கூடிய இடத்தில் வந்து உட்காருகிறார்.

Sponsored


Sponsored


சனி பகவான் லாபஸ்தானமான பதினோராம் இடத்தில் வந்து உட்கார்வதால், எடுத்த காரியம் எதுவாக இருந்தாலும், உங்களுக்கு லாபகரமாகவும் வெற்றிகரமாகவும் முடியும். தொட்ட காரியம் யாவும் துலங்கும். முடிக்கவே முடியாது என சவாலாக இருந்த காரியத்தை எல்லாம் சர்வசாதாரணமாக முடிக்கக்கூடிய சக்தி, ஆற்றல் எல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்.  

சமுதாயத்தில் மிகப்பெரிய அதிகாரமுள்ள பதவி, அந்தஸ்துள்ளவர்களுடைய அறிமுகம் உங்களுக்குக் கிடைக்கும். அவர்கள் மூலமாக சொந்தக் காரியங்கள் பலவற்றைச் சாதிப்பீர்கள். மனதில் ஒருதெம்பு, பேச்சில் ஒரு தெளிவு, தோற்றத்தில் பொலிவு, நடை உடை பாவனையில் ஒரு வீரம், மிடுக்கு தோன்ற ஆரம்பிக்கும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கங்கள் விலகி உங்களுக்கு உரிய பங்கு கிடைக்கும். 

சமயோஜித புத்தியை இனி நீங்கள் பயன்படுத்துவீர்கள். சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுந்துவிடலாமென்று முடிவு பண்ணுவீர்கள். மாறுபட்ட புதிய அணுகுமுறைகளால் வெற்றிகள் பலவற்றைக் குவிப்பீர்கள். வாடகை வீட்டில் குடியிருந்து வந்தவர்களுக்குச் சொந்த வீடு வாங்கும் அமைப்பு வந்து சேரும். 

கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் விலகி, அவர்களுக்குள் அந்நியோன்யம் பெருகும். உங்களுடைய பிள்ளைகளுக்குத் தள்ளிப்போய்க்கொண்டே இருந்த திருமணம் கைகூடிவரும். படித்து முடித்துவிட்டு, வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். வெளிநாடுகளுக்குச் செல்லும் யோகம் ஒரு சிலருக்குக் கிடைக்கும். 

வியாபாரிகளுக்கு வெளிமாநிலம், வெளிநாட்டுத் தொடர்பு நிறுவனங்களால் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. உத்தியோகத்தில் இருந்தவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இவ்வளவு நாள்களாக உங்களுடைய உழைப்பை அங்கீகரிக்காமல் இருந்த உங்கள் உயர் அதிகாரி உங்கள் திறமையை அடையாளம் கண்டு அதற்கேற்ற புதிய பொறுப்புகளைத் தருவார். நல்ல சம்பளமும் சலுகைகளும் கிடைக்கும். 

மாணவ, மாணவிகள் படிப்பில் நல்லவிதமாகப் படித்து முன்னேறுவார்கள். விவசாயிகளுக்குப் புதிதாக நிலம் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். உடம்பில் இருந்த அசதி, அலுப்பு உங்களைவிட்டு விலகும். செழிப்பான வாழ்க்கை அமைய இந்த சனிப்பெயர்ச்சி மிகவும் துணை நிற்கும்.

கும்ப ராசிக்காரர்கள், திருநெல்வேலி மாவட்டம் கள்ளிடைக்குறிச்சியில் இருக்கும் ஶ்ரீபூமாதேவி சமேத ஆதிவராகப் பெருமாளை வழிபட்டால், மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம். 

(கும்ப ராசிக்காரர்கள், சனிப்பெயர்ச்சியின் விரிவான பலன்களை அறிய இந்த வீடியோ லிங்க்கை கிளிக் செய்யவும்).


திருநெல்வேலியிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப் பெருமாள் திருக்கோயில்.  இங்கு ஆதிவராகப் பெருமாள் பூமாதேவி சமேதராக அமர்ந்த நிலையில் சேவை சாதிக்கிறார். இவரை `நித்ய கல்யாணப் பெருமாள்’ என்றும் கூறுவார்கள். 


இந்தக் கோயிலில் ஶ்ரீதேவி, பூதேவி இருவரும் தனித்தனி சந்நிதிகளில் இருக்கின்றனர். சயனநிலையிலும் பெருமாள் சந்நிதி இருப்பதால் அவரையும் தரிசிக்கும் வாய்ப்பு பக்தர்களுக்குக் கிடைக்கும். இந்தக் கோயிலுக்குச் சென்றால், இரண்டு பெருமாள்களை தரிசனம் செய்யலாம். கோயிலின் பின்புறம் பெருமாளின் பத்து அவதாரங்களையும் சிலை வடிவில் செதுக்கியுள்ளனர்.    

அனைத்து ராசிக்காரர்களுக்குமான சனிப்பெயர்ச்சிப் பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம் குறித்து முழுமையாக அறிய இங்கே கிளிக் செய்யவும்...

தலபுராணம்: 

ஒரு சமயம் குபேரன் சாப விமோசனம் பெறுவதற்காக பூலோகம் வந்தான். தாமிரபரணி நதிக்கரையில் பெருமாள் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தான். ஒருநாள் ஒரு பக்தரின் கனவில் தோன்றி, பெருமாள் தன் இருப்பை வெளிப்படுத்தினார். அதைத் தொடர்ந்து அங்கு கோயில் எழுப்பப்பட்டது. 

கல்யாணத்தடை, குழந்தைப்பேறு, வியாபாரம் ஆகியவற்றுக்காக பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். இந்த ஆலயத்தின் மற்றொரு பெருமை, இங்கு அடிக்கடி கருட சேவை நடைபெறும். 

மேஷ ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்களைப் படிக்க...இங்கே கிளிக் செய்யவும்...

ரிஷப ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்களைப் படிக்க...இங்கே கிளிக் செய்யவும்...

மிதுன ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்களைப் படிக்க...இங்கே கிளிக் செய்யவும்...

கடக ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்களைப் படிக்க...இங்கே கிளிக் செய்யவும்...

சிம்ம ராசியினரின் சனிப்பெயர்ச்சிப் பலன்களைப் படிக்க...இங்கே கிளிக் செய்யவும்...

கன்னி ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்களைப் படிக்க...இங்கே கிளிக் செய்யவும்...

துலாம் ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்களைப் படிக்க...இங்கே கிளிக் செய்யவும்...

விருச்சிக ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்களைப் படிக்க...இங்கே கிளிக் செய்யவும்...

தனுசு ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்களைப் படிக்க...இங்கே கிளிக் செய்யவும்...

மகர ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சிப்பலன்களைப் படிக்க... இங்கே கிளிக் செய்யவும்...

சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்களைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்...
 Trending Articles

Sponsored