சனி தோஷம் போக்கும் வைரவன்கோயில் ஸ்ரீகாலபைரவர்!Sponsoredஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே கும்பகோணம் சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் வைரவன்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீகாலபைரவர், காசி காலபைரவருக்கு இணையான அத்தனை சக்திகளையும் உள்ளடக்கியவராக எழுந்தருளியிருக்கிறார்.

வைரவன் கோயிலில் எழுந்தருளி இருக்கும் ஶ்ரீகாலபைரவருக்கு சிறப்பான புராண வரலாறும் உண்டு.

Sponsored


தந்தைக்கு குருவான முருகப்பெருமானிடம் பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசம் பெறுவதற்காக சுவாமிமலைக்குப் புறப்பட்டார். செல்லும் வழியில் வைரவன்கோயில் என்னும் தலத்தில் தங்கியிருந்து அருள்பாலிக்கும்படி தம்முடைய அம்சமான ஶ்ரீகாலபைரவருக்கு கட்டளை பிறப்பித்தார். ஈசனின் கட்டளையை ஏற்ற ஶ்ரீகாலபைரவர், வைரவன்கோயிலில் எழுந்தருளியதாக தலவரலாறு. 

Sponsored


வைரவன்கோயிலில் காவிரி நதியின் வடகரையில் தெற்கு நோக்கி எழுந்தருளியதாலும், ஆலயத்தின் வலப் புறம் காவிரியின் கிளை வாய்க்கால் பாய்வதாலும், ஶ்ரீகாலபைரவரின் தெற்குப் பகுதியில் மயானம் அமைந்திருப்பதாலும், இந்தத் தலம் காசிக்கு நிகராகப் போற்றப்பெறுகிறது.

ஶ்ரீகாலபைரவர் கோயிலின் அன்னதானக் குழுத் தலைவர் முத்துவெங்கட்ராமனிடம் கோயிலின் சிறப்புகள் பற்றிக் கேட்டோம்.

“காசியில் உள்ள காலபைரவரின் அத்தனை சக்திகளையும் கொண்டவராக, இந்தத் தலத்தில் பைரவர் எழுந்தருளியிருக்கிறார்.  பைரவரை இந்தத் தலத்தில் எழுந்தருளச் செய்த பிறகு ஈசன் தங்கிய  இடம் ஈசன்குடி என்று அழைக்கப்பட்டு, பின்னர் ஈச்சங்குடியானது. தேவர்களை நிறுத்திச் சென்ற ஊர் தேவன்குடியாகவும், கணபதியை பூஜித்துப் புறப்பட்ட இடம் கணபதி அக்ரஹாரமாகவும், தேவியை உமையாள்புரத்தி லும், நந்தியை நந்திமதகிலும், கங்கையைக் கங்காபுரத்திலும் எழுந்தருளச் செய்தார் ஈசன். அந்த வகையில் இந்தத் தலத்தில் எழுந்தருளி யிருக்கும் ஶ்ரீகாலபைரவர், தம்மை வழிபடும் பக்தர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வரப்பிரசாதியாகத் திகழ்கிறார். 

வைரவன்கோயில் ஸ்ரீகாலபைரவருக்கு ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமியன்றும் அர்த்தசாமத்தில் உலக நலன் கருதி சுவர்ணாகர்ஷன பைரவ மூலமந்திரம் ஜபித்து சிறப்பு ஹோமம் நடைபெற்றுவருகிறது. ஹோமத்துடன் 108 வலம்புரி சங்காபிஷேகம், கலசாபிஷேகம் ஆகிய அபிஷேகங்களும் நடத்தப்பட்டு வருகிறது'' என்றார்.

கோயிலின் குருக்கள் ரவி குருக்களிடம் ஶ்ரீகாலபைரவரை வழிபடுவதால் பக்தர்களுக்குக் கிடைக்கும் பலன்கள் பற்றியும், பூஜைமுறைகள் பற்றியும் கேட்டோம்.

“காலபைரவரை வணங்குவதால் வியாதிகள் தீரும், பணத்தட்டுப்பாடு நீங்கும், திருமணத் தடை விலகும், புத்திர பாக்கியம் கிட்டும், சனியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் விலகும், இழந்த பொருள்கள் மீண்டும் கிடைக்கும். பகை நீங்கும், நினைத்த காரியம் வெற்றிகரமாக முடியும். மேலும், அஷ்டமி திதி, திருவாதிரை நட்சத்திரம், ஞாயிறு, வியாழக்கிழமை நாள்களில் உச்சிக்காலத்தில் வணங்குவது நல்ல பலனைத் தரும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாள்களில் ராகு காலத்தில் வணங்குவது மிகவும் சிறந்த பலனைத்தருகிறது. இந்தத் தலத்தில் நவகிரகங்களையும் தன் நெஞ்சுப் பகுதியில் தாங்கி இருக்கும் ஶ்ரீகாலபைரவரை பூஜிப்பது. நவகிரக தோஷங்களின் நிவர்த்திக்காக தனித்தனியே நவகிரகங்களை பூஜிப்பதற்கு நிகரானது. இங்கு ஶ்ரீகாலபைரவரை பூஜை செய்து வணங்கினால், நவகிரகங்களின் தோஷங்கள் நிவர்த்தி செய்யப்படுவதாக பக்தர்களிடையே ஆழ்ந்த நம்பிக்கை நிலவி வருகிறது'' என்றார்.

வைரவன்கோயிலைச் சேர்ந்த சேகர் என்பவரிடம் பேசியபோது, ''இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் அஷ்டமி தினத்தில் ஹோமங்கள், அபிஷேகங்கள், சங்காபிஷேகம், கலசாபிஷேகம் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதிலிருந்தும் பக்தர்கள் வந்துசெல்கிறார்கள். வைரவன்கோயில் சாலையின் ஓரத்தில் குறுகிய இடத்தில் அமைந்துள்ளதால், ஹோமங்களில் கலந்துகொள்ளவும், சுவாமி தரிசனம் செய்யவும் மிகவும் சிரமப்படுகின்றனர் பக்தர்கள்'' என்று கூறியவர், பக்தர்களின் சிரமத்தைப் போக்குவதற்காக ஶ்ரீகாலபைரவருக்கு புதிதாக திருக்கோயில் கட்டும் திருப்பணி நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

ஶ்ரீகாலபைரவரின் திருக்கோயில் விரைவில் புதுப்பொலிவு பெறவேண்டும்; பக்தர்கள் திரளாக வந்து ஶ்ரீகாலபைரவரின் அருள் பெறவேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு புறப்பட்டோம்.Trending Articles

Sponsored