‘உண்மையான கடுகளவு விசுவாசம், மரங்களையே நகரச் செய்யும்!’ #BibleStoriesSponsoredபைபிளின் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து உவமைகளாகவும் உருவகங்களாகவும் கூறிய கதைகள், உலகம் முழுவதும் உள்ள மக்களால் பெரிதும் விரும்பிப் போற்றப்படுபவை.

ஒளி  வந்தால்  இருள் விலகி விடுவதுபோல் ஆண்டவரை நம் இதயத்தில் வாசம் செய்ய அனுமதித்துவிட்டால், அதன்பிறகு அவர்கள் வழி தவறிச் செல்லமாட்டார்கள். 

Sponsored


இறைவனை நெஞ்சத்தில் இறுத்தி  எப்போதும் வழிபட்டுக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் தங்களின் ஒவ்வொரு செயலின்போதும் அவருடனே பேசிக்கொண்டே இருப்பார்கள். அவருக்குப் பிடித்த செயல்களை மட்டுமே செய்வார்கள். 

Sponsored


அதனால்தான் இயேசு கிறிஸ்து சொல்கிறார்... ‘உண்மையான விசுவாசம், உங்களுக்குக் கடுகளவு இருந்தால் நீங்கள் அந்தக் காட்டத்தி மரங்களைப் பார்த்து நகர்ந்து போ என்றால் அவை நகர்ந்துபோகும்’ என்கிறார். 

இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்வதில் ஓவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பிரார்த்திப்பார்கள். சிலர் விசேஷ நாட்களில் மட்டும் கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள். வேறு சிலர் எல்லோரும் கோயிலுக்குச் செல்லும்போது செல்வார்கள். இன்னும் சிலர் தினமும் கோயிலுக்குச் செல்வார்கள்.

கோயிலுக்குச் செல்லும்போது அங்கு வைக்கப்பட்டிருக்கும் காணிக்கைப் பெட்டியில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இறைவனுக்கு நன்றி சொல்லும்விதமாகவும் எளியவர்களுக்கு உதவும்விதமாகவும் அங்கே காணிக்கைப்பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. விலை உயர்ந்த காணிக்கை எதுவென்று இயேசு கிறிஸ்து கூறுகிறார்.

ஒருமுறை தேவாலயத்தில் இறைவனின் கட்டளைகளையும் அவற்றை மனிதர்கள் கடைப்பிடிப்பது பற்றியும் இயேசு கிறிஸ்து போதித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு அவர் ஆண்டவரை நோக்கி பிரார்த்தித்தார். இதைத் தொடர்ந்து எல்லோரும் வரிசையில் நின்று ஒவ்வொருவராக வந்து காணிக்கை செலுத்தினர்.  

அந்தக் காலத்தில் வெள்ளி நாணயம் தங்க நாணயம் ஆகிய இரண்டு நாணயங்கள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. ஒவ்வொருவரும் தங்கள் முறை வரும்போது அவர்களால் இயன்ற காசுகளை காணிக்கையாகச் செலுத்தி வந்தனர். அப்போது ஒரு தனவான் மிகப் பெரிய மூட்டையில் காணிக்கையாக காசுகளை எடுத்து வந்து கொட்டினார்.

வெள்ளி நாணயங்கள் காணிக்கைப் பெட்டியில் விழும் ஓசை அந்த ஆலயம் முழுவதும் கேட்டது. அதன்பிறகு அவர் மிகுந்த கம்பீரமாக நடந்து போனார். அவரைத் தொடர்ந்து பலரும் தங்கள் காணிக்கைகளைச் செலுத்தினர். அவர்களில் ஒருவராக ஒரு கைம்பெண்ணும் காணிக்கை செலுத்தினார். 

அவள் மற்றவர்களைப்போல் நூறுகளில் ஆயிரங்களில் காணிக்கை செலுத்தவில்லை. தன்னிடம் இருந்த 2 வெள்ளிக் காசுகளை மட்டுமே செலுத்தி விட்டுப்போனாள். மிகுந்த நடுக்கத்துடனும் கூச்சத்துடனும் அவள் அந்தக் காணிக்கையைச் செலுத்திப் போனாள். 
அப்போது இயேசு கிறிஸ்து தன் சீடர்களை நோக்கிச் சொன்னார்.

“இங்கு காணிக்கை செலுத்தியவர்களிலேயே இந்தப் பெண்தான் அதிகம் காணிக்கை செலுத்தி இருக்கிறாள்.” இதைக் கேட்டதும் சீடர்களுக்கோ மிகவும் வியப்பு? 

அவர்களின் மனத்தில் இருப்பதை புரிந்துகொண்ட இயேசு கிறிஸ்து, “மற்றவர்கள் எல்லோரும் தங்களிடம் உள்ளதிலிருந்து காணிக்கை செலுத்தினர். ஆனால், அந்தக் கைம்பெண்ணோ உள்ளதையெல்லாம் கொடுத்தாள். தன்னிடம் அடுத்தவேளை உணவைத் தேடுவதற்கு வழியில்லாத நிலையில் இந்தக்காசுகளைத் தந்திருக்கிறார். அவள் தன்னை முழுவதுமாக இறைவனிடம் ஒப்படைத்திருக்கிறாள். அந்த விசுவாசம்தான் பெரிது!”

இறைவன் நாம் எவ்வளவு தருகிறோம் என்று பார்ப்பதில்லை. நாம் அதை எந்த சூழ்நிலையில் எப்படித் தருகிறோம் என்றுதான் பார்க்கிறார். உலகையே படைத்தவருக்கு நமது காணிக்கை பெரிதல்ல. நம்மையே நாம் காணிக்கையாக அவரிடம் ஒப்படைக்கிறோமா? என்றுதான் பார்க்கிறார்.Trending Articles

Sponsored