இடம்பெயர்ந்தார் சனிபகவான்! - இனி இரண்டரை ஆண்டுகள் தனுசில் சஞ்சரிப்பார்Sponsoredஇன்று காலை 10.01 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெற்றது. விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு சனிபகவான் இடம்பெயர்ந்தார். 

இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை, சனீஸ்வர பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆவதைத்தான் சனிப்பெயர்ச்சி என்கிறோம். அதன்படி, இரண்டரை ஆண்டுக்காலம் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்த சனி பகவான், இன்று தனுசு ராசிக்கு இடம்பெயர்ந்தார். இனி இரண்டரை ஆண்டுகளுக்கு சனிபகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பார். அதன்பின், 2020 -ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி, மகர ராசிக்கு இடம் பெயர்வார்.

Sponsored 

Sponsored


சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, காரைக்கால் திருநள்ளாறில் ஆயிரக்காணக்கான பக்தர்கள் திரண்டனர். நள தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிப்பட்டனர். அங்கு, ஐந்து முக ஆராதனை வழிபாடு நடைபெற்றது. மேலும், சனீஸ்வரருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. ரிஷபம், தனுசு, விருச்சிகம், மகரம் ஆகிய ராசிக்காரர்களும் பரிகாரம்செய்துவருகின்றனர்.  பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள திருநள்ளாறு சனிபகவான் சன்னதியில், விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம்பெயரும் நிகழ்ச்சிக்கான சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகா சந்நிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் தலைமையில், இவை வெகுவிமரிசையாக நடைபெற்றன. காலை 10.01-க்கு மகா தீபாராதனை நடந்தது.  Trending Articles

Sponsored