சனிப்பெயர்ச்சி... திரண்ட பக்தர்கள்... விழாக்கோலம் பூண்ட குச்சனூர்! #SaniPeyarchi2017Sponsoredபெரும்பாலான கோயில்களில் நவகிரகங்களிலோ அல்லது துணைக்கோயிலிலோ வீற்றிருப்பார் சனீஸ்வரபகவான். தமிழகத்திலேயே தனிக்கோயிலாக சனீஸ்வரபகவான் வீற்றிருப்பது திருநள்ளாறிலும், குச்சனூரிலும் மட்டும்தான். அதிலும் குச்சனூரில் சுயம்பு வடிவில் காட்சியளிக்கிறார் சனீஸ்வர பகவான்.

தலவரலாறு:

Sponsored


‘தினகரன் மான்மியம்’ என்கிற பழமையான நூல் வாயிலாகவே குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் பற்றிய தலவரலாற்றை  அறியமுடிகிறது. ‘முன்பொரு காலத்தில் தினகரன் என்ற மன்னன் திருமணம் முடிந்து பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாது இருந்திருக்கிறார். கடவுளிடம் மனமுருகி வேண்டிக்கொண்ட மன்னருக்கு ஓர் அசரிரீ கேட்கிறது. ‘உன் வீட்டுக்கு ஒரு பிராமணச் சிறுவன் வருவான். அவனை வளர்ந்துவந்தால் குழந்தை பிறக்கும்’ என்று சொல்கிறது அந்த அசரிரீ. அதன்படி ஒரு பிராமணச் சிறுவன் மன்னர் தினகரனிடம் வந்து சேர்கிறான். அவனுக்கு சந்திரவதனன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தார் தினகரன். அரசிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அவனுக்கு ‘சதாகன்’ என்று பெயர் சூட்டினார் மன்னர். காலங்கள் உருண்டோட சந்திரவதனன் ஒரு மன்னனுக்கு உரிய வீரம், திறமை, விவேகத்துடன் இருந்ததால் அவனுக்கே முடிசூட்டினார் தினகரன். இந்த நிலையில், தினகரனுக்கு சனி தோஷம் பிடிக்கிறது. இதனால் பல சோதனைகளையும் துன்பங்களையும் சந்திக்கிறார் தினகரன்.

Sponsored


தனது வளர்ப்பு தந்தை அடையும் துன்பத்தை கண்டு மனமுடைந்த சந்திரவதனன், தந்தையின் துன்பம் நீங்க, சுரபி நதிக்கரைக்குச் சென்று இருபால் சனியின் உருவத்தை நிறுவி அதனை வழிபட துவங்கினான். இவனது வழிபாட்டில் மனமிரங்கிய சனீஸ்வர பகவான் அவன் முன் தோன்றி, ‘முற்பிறவியில் செய்த பாவ வினைகளுக்கு ஏற்பவே இந்தபிறவியில் சனி தோஷம் பிடிக்கிறது. இதன் காலம் ஏழரை நாழிகை, ஏழரை நாட்கள், ஏழரை மாதங்கள், ஏழரை ஆண்டுகள். உன் தந்தை முற்பிறவியில் செய்த பாவ வினைகளின் விளைவே இது’ என்று கூறினார். ‘என் தந்தைக்கு வரும் துன்பங்களை எனக்கு கொடுங்கள். நான் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று கோரிக்கை வைக்கிறான் சந்திரவதனன். இதனால் ஏற்படும் துன்பங்களை பற்றி சனீஸ்வர பகவான் எச்சரித்தும் தனது முடிவில் உறுதியாக இருந்தான் சந்திரவதனன்.

ஒப்புக்கொண்ட சனீஸ்வர பகவான் அவனுக்கு கடுமையான பல துன்பங்களையும், சோதனைகளையும் கொடுத்தார். சுரபி நதிக்கரையில் தீவிர வழிபாட்டில் இறங்கினார் சந்திரவதனன். ஒரு கட்டத்தில் மனம் இறங்கிய சனீஸ்வர பகவான் சந்திரவதனன் முன் தோன்றி, ‘தங்கள் குறைகளை உணர்ந்து இந்த இடத்துக்கு வந்து என்னை வணங்கும் எவருக்கும் சனி தோஷத்தால் வரும் துன்பங்களைக் குறைத்து முடிவில் நன்மைகளை அளிப்பேன்’ என்று சொல்லி மறைந்தார். அந்த இடத்தில் சுயம்புவாக எழுந்தருளினார். குச்சுப்புல்லினால் ஒரு கூரை வேய்ந்து சனி தோஷத்தால் துன்பப்படும் மக்களுக்கு இந்த இடத்தில் வழிபாடு நடத்தினால் துன்பங்கள் குறையும் என்று வழிகாட்ட ஆரம்பித்தான் சந்திரவதனன். பிற்காலத்தில் குச்சுப்புல் கூரை,  'குச்சனூர்' என்றானது.

சிறப்புமிக்க ஆடிப்பெருந்திருவிழா :

குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோயிலில் ஆடி மாதம் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது. அதனை ‘ஆடிப்பெருந்திருவிழா’ என்பார்கள். மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் இப்பெருந்திருவிழாவில், உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுயம்பு சனீஸ்வர பகவானை தரிசனம் செய்வார்கள். ஆடி மாதம் முழுவதும் வரும் சனிக்கிழமைகளில் நாள் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கோயிலில் ‘விடத்தை மரம்’ தல மரமாகவும், ‘கருங்குவளை மலர்’ தல மலராகவும், ‘வன்னி இலை’ தல இலையாகவும் உள்ளது. சனீஸ்வர பகவானுக்கு ‘காகம்’ வாகனமாகவும், ‘எள்’ தானியமாகவும் இருக்கிறது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் எள் விளக்கு ஏற்றி, கறுப்பு வஸ்திரம் சாத்தி, காகத்துக்கு எள்ளு சாதம் பிரசாதம் வைத்து சனி பகவானின் ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள்.Trending Articles

Sponsored