கிறிஸ்துமஸ் தினம்: தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை #christmas2017Sponsoredகிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (25.12.2017) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தேவாலயங்களில் நள்ளிரவு மற்றும் அதிகாலையில் சிறப்பு திருப்பலி மற்றும் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றன.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூரும் வகையில் டிசம்பர் 25 -ம் தேதி கிறிஸ்துமஸ் விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று தமிழகம் முழுவதிலும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Sponsored


Sponsored


புகழ்பெற்ற சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நள்ளிரவில் நடந்த சிறப்புப் பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அதேபோல் பெசன்ட் நகர் தேவாலயத்தில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் பங்கேற்று, சிறப்பு கூட்டு பிரார்த்தனை செய்தனர். 

குழந்தை இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததை நினைவுகூரும் வகையில் ஆலயங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. விழாவையொட்டி அனைத்து தேவாலயங்களிலும் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. Trending Articles

Sponsored